[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்
  • BREAKING-NEWS உள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • BREAKING-NEWS சர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு
  • BREAKING-NEWS தூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்

‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள் 

vijay-fans-give-cctv-cameras-for-school-students

பிகில் பட வெளியீட்டை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் பேனருக்கு பதிலாக மக்களுக்கு பயன்படும் வகையில் சிசிடிவி கேமாராக்களை வாங்கி கொடுத்து அசத்தியுள்ளனர். 

சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, அரசியல் தலைவர்கள், நடிகர்கள் பலரும் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை பேனர் வைக்க வேண்டாம் என வலியுறுத்தினர். ‘காப்பான்’ திரைப்பட விழாவில் பேசிய நடிகர் சூர்யா, பேனர், கட் அவுட்டுகள் வைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு அறிவுறுத்தினார். 

Image result for சூர்யா பேனர் தடை

இதன் எதிரொலியாக, சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் பேனர் வைப்பதை கைவிட்டு அதற்கு பதிலாக 150 ஹெல்மெட்டுகளை வாங்கி, பொதுமக்கள் பயனடையும் வகையில் இலவசமாக வழங்கினர். மேலும் திருத்தணி அடுத்த முருக்கம்பட்டு தொடக்கப்பள்ளியில் பயிலும் 150 மாணவ, மாணவிகளுக்கு இலவச புத்தக பை வழங்கினர். 

இதனிடையே பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசுகையில் ரசிகர்கள் யாரும் பேனர் வைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். மேலும் அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் பேனர் வைக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். பிகில் படம் வரும் 25 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் பேனருக்கு பதிலாக மாற்று சிந்தனையை நோக்கி பயணித்துள்ளனர். 

Image result for விஜய் பிகில் இசை

இதுகுறித்து திருநெல்வேலி மாநகராட்சி காவல் துணை ஆணையர் சரவணன் அவரது ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது “தீபாவளிப் பண்டிகைக்கு நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள “பிகில்” திரைப்படத்தை முன்னிட்டு, கட்அவுட், பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு பதிலாக சமுதாயத்திற்கு பயனளிக்கும் வகையில் ஏதேனும் செய்ய வேண்டுமென விரும்பி அவரது நற்பணி இயக்க நிர்வாகிகள் என்னை அணுகினர். 

காவல்துறை ஆலோசனை ஏற்று விஜய் ரசிகர்கள் நெல்லை மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட நான்கு இடங்களில் மொத்தம் 12 சிசிடிவி கேமிராக்கள் மற்றும் மானிட்டர் அமைத்து கொடுத்தனர். பெண்கள் பாதுகாப்பிற்காக சிசிடிவி அமைத்து கொடுத்த விஜய் நற்பணி இயக்கத்திற்கு நன்றி. சிசிடிவி மூலம் தேவையற்ற பிரச்னைகள் குறைந்து படிப்பில் கவனம் செலுத்த முடியும். உங்கள் பாதுகாப்பை சிசிடிவி உறுதி செய்வது போல உங்கள பெற்றோர் பாதுகாப்பை உறுதி செய்ய கட்டாயம் ஹெல்மட் அணிந்து வாகனத்தை ஓட்ட வலியுறுத்துங்கள். நெல்லை விஜய் ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு முன்னோடியாக விளங்குகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் முன்னனி நடிகர்கள் கூறும் நற்கருத்துக்களை அப்படியே ரசிகர்கள் ஃபாலோ செய்வது மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இதுப்போன்று இளைஞர்கள் மக்களுக்கு பயனளிக்கும் வகையிலான செயல்பாடுகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close