[X] Close
JUST IN
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் மேலும் 6 கிலோ நகை சிக்கியது
  • BREAKING-NEWS அயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

அஜித் ஒரு சூப்பர் ஸ்டார் - த்ரிஷா பாராட்டு

trisha-said-ajith-is-super-star

விஜய்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என குறிப்பிட்டு அவரது தாயார் எழுதிய கடிதம் வைரலாகி வரும் நிலையில், அஜித் ஒரு சூப்பர் ஸ்டார் என நடிகை த்ரிஷா கூறியுள்ளார். 

நடிகர் விஜய்க்கு அவரது தாயார் எழுதிய கடிதம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் விஜய் குழந்தை பருவம் முதல் முன்னணி நடிகர் ஆகும் வரையிலான அவரது செயல்களை வர்ணித்து எழுதியுள்ளார். மேலும், “எம்.கே. தியாகராஜபாகவதர், எம்.ஜி.ராமச்சந்திரன், ரஜினிகாந்த் வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னை கொண்டாட உலகமே காத்திருக்கையில் தாய் என்பதெல்லாம் மறந்து ரசிகர்களுடன் கூட்டத்தோடு கூட்டமாய் நானும் அடிக்கிறேன் ஒரு நீண்ட பிகில்'' எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் நடிகை த்ரிஷா யுனிசெப் அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடிகர் அஜித் ஒரு சூப்பர் ஸ்டார் எனவும் நேர்கொண்ட பார்வை மாதிரியான படத்தில் நடித்தது மிகவும் பாராட்டுக்குரியது எனவும் தெரிவித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close