‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘மனம்’ உள்ளிட்ட படங்களில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் சமந்தா. இப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ஒரு வீட்டில் நாக சைதன்யாவும் சமந்தாவும் திருமணத்துக்கு முன்பே சேர்ந்து வாழும் வீடியோ ஒன்று இணையதளங்களில் பரவியது. இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணத்திற்கு தயாராகி வருகின்றனராம்.
இவர்கள் காதலை இருவீட்டு பெற்றோரும் ஏற்றுக்கொண்டனராம். விரைவில் நாக சைதன்யா-சமந்தா திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது. இதனிடையே நாகார்ஜுன் கூறுகையில். ‘அவனுக்கு (சைத்தன்யா) சந்தோஷம் தரக்கூடிய ஒருவரைத் தேடி கண்டிப்பிடித்திருக்கிறான்;” எனக்கும் அமலாவுக்கும் மிகவும் மகிழ்ச்சி. இது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம்’ என்று கூறியிருந்தார். எனவே சமந்தா-நாக சைத்னாய திருமணம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.
இதனிடையே விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் திருமணத்துக்கு பிறகு கணவர் குடும்பத்தின் கவுரவம் பாதிக்கும் வகையிலான கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்றும் முன்பு சமந்தா கூறியிருந்தார். அவர் தற்போது புதிய படங்களை ஒப்புக்கொள்வதை திடீரென்று நிறுத்தி உள்ளார். ஜூனியர் என்.டி.ஆருடன் சமந்தா நடித்துள்ள ‘ஜனதா கேரேஜ்’ படம் விரைவில் திரைக்கு வர தயாராகிறது. தற்போது ஏற்கனவே தனுஷுடன் ஒப்பந்தமான ‘வட சென்னை’ என்ற ஒரு படம் மட்டும் கைவசம் வைத்துள்ளார் .அதனைத் தவிர புதிய படங்களை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் சமந்தா திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகிவிட முடிவு செய்திருப்பதாக கோலிவுட்டில் கூறப்படுகிறது.
ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்..! - தர்மஅடி கொடுத்த மக்கள்
குளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
ட்விட்டரில் யார் டாப் ? - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்