[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

’கென்னடி கிளப்’ கிளைமாக்ஸ்-க்கு நிஜ கபடி போட்டி!

real-women-kabbadi-players-taking-part-in-kennedy-club-climax

சுசீந்திரன் இயக்கும் ’கென்னடி கிளப்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக, நிஜ கபடி போட்டியை படக்குழு படமாக்கி வருகிறது.

சுசீந்திரன் இயக்கி வரும் படம், 'கென்னடி கிளப்'. சசிகுமார், இயக்குனர் பாரதிராஜா இணைந்து நடிக்கின்றனர். பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு, விழுப்புரம் உள் விளையாட்டரங்கில் நடந்து வருகிறது.  

படப்பிடிப்பு விழுப்புரத்தில் நடந்தாலும் கதைப்படி இந்தக் காட்சி, வட இந்தியாவில் நடப்பது போல் இருக்க வேண்டும் என்பதால் பிரத்யேகமாகப் படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மட்டும் ரூ.2 கோடி செலவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

(சசிகுமார், ஹர்ஷன், மீனாட்சி)

இந்த கிளைமாக்ஸ் காட்சியில் 16 கபடி குழுக்கள் கலந்துகொண்டுள்ளன. இதற்காக, ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, பூனே, கேரளா, ஆந்திரா, மங்களூர் போன்ற பகுதிகளில் இருந்து நிஜ கபடி குழுக்கள் வந்துள்ளன. சுமார் 300 வீராங்கனைகள் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து பாடல் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது என தயாரிப்பாளர் தாய் சரவணன் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close