[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

நடிகர் விஜயுடன் மீண்டும் இணையும் மோகன் ராஜா?

director-mohan-raja-confirms-joining-hands-with-vijay-again

நடிகர் விஜயை இயக்குநர் மோகன் ராஜா மீண்டும் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து 2011-ம் ஆண்டு வெளியான திரைப்படம் வேலாயுதம். இந்த திரைப்படத்தில் நடிகை ஜெனிலியா, ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படம் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

அதற்கு பிறகு தனி ஒருவன் என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்தார் மோகன் ராஜா. அத்திரைப்படம் மோகன் ராஜாவுக்கு மட்டுமின்றி ஜெயம் ரவிக்கும் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.  தனி ஒருவன் 2 திரைப்படத்துக்கான வேலைகளில் தற்போது மோகன் ராஜா மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஜயை இயக்குநர் மோகன் ராஜா மீண்டும் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்லூரி விழா ஒன்றில் பேசிய மோகன் ராஜா, நடிகர் விஜயுடன் மீண்டும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

தனி ஒருவன் 2 திரைப்படத்துக்கு பிறகு விஜயை வைத்து மோகன் ராஜா படம் இயக்குவார் என தெரிகிறது. நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பெயரிடப்படாத திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close