[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்குடியில் அனுமதியின்றி தேர்தல் அலுவலகம் திறந்த புகாரில், சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி மீது காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ஓபிஎஸ் மகன் அதிமுகவிற்காக பல ஆண்டுகளாக உழைத்து வருகிறார்; அதனால் அவரை வேட்பாளராக அறிவித்ததில் எந்த தவறும் இல்லை - அமைச்சர் கே.சி.வீரமணி
  • BREAKING-NEWS நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்
  • BREAKING-NEWS நேர்காணலுக்கு கூட வராமல், தான் தேர்தலில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் - ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வுமுறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உட்பட 10பேரை மார்ச் 27ல் மீண்டும் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உதகை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.52 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.87 காசுகளாகவும் விலை நிர்ணயம்

இரட்டை வேடத்தில் தனுஷ்.. மீண்டும் ஜோடியாகிறார் சிநேகா?

sneha-in-dhanush-s-next-with-durai-senthilkumar

நடிகர் தனுஷுடன் இணைந்து சிநேகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ‘எதிர்நீச்சல்’ படத்தை இயக்கியவர் இயக்குநர் துரை செந்தில் குமார். அடுத்ததாக நடிகர் தனுஷை வைத்து ‘கொடி’யை இயக்கினார். இந்தப் படதில் இடம்பெற்ற நடிகை த்ரிஷாவின் எதிர்மறையான கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது. கதை அம்சத்திலும் வசூல் ரீதியாகவும் இந்தப் படம் தனுஷுக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி தந்திருந்தது.

இந்நிலையில் தனுஷை வைத்து இயக்குநர் துரை செந்தில் குமார் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இதில் நடிகை சிநேகா இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது. தலைப்பிடப்படாத இப்படத்தில் தனுஷ், தந்தை மற்றும் மகன் வேடத்தில் நடிக்கின்றார். இதற்கான படப்பிடிப்பு வேலைகள் இந்த மாதம் தொடங்க உள்ளன. தனுஷின் தந்தை கதாபாத்திரத்திற்கு ஜோடியாகதான் சிநேகா நடிக்க உள்ளார். தனுஷின் இளம் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இப்போது தனுஷ், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘அசுரன்’ படப்பிடிப்பில் மும்முரமாக உள்ளார். அதனையடுத்து விரைவில் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தனுஷின் அண்ணனும் இயக்குநருமான செல்வராகவன் இயக்கியிருந்த ‘புதுப்பேட்டை’யில்  தனுஷூடன் இணைந்து சிநேகா நடித்திருந்தார். இது 2006 ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாக வெற்றியும் பெற்றது. படத்தில் இடம்பெற்ற தனுஷின் ‘கொக்கி குமார்’ கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் தனித்த அடையாளத்தை ஏற்படுத்தியிருந்தது. இதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட உள்ளதாகவும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தனுஷ் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியின் போது தெரிவித்திருந்தார். ஆக, 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனுஷுடன் இணைந்து சிநேகா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close