[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

ஜோனாஸ் சகோதரர்களின் இசை ஆல்பத்தில் பிரியங்கா சோப்ரா!

the-jonas-brothers-have-reunited

நிக் ஜோனாஸ், தனது சகோதரர்களுடன் உருவாக்கியுள்ள இசை ஆல்பத்தில் நடிகையும் அவர் மனைவியுமான பிரியங்கா சோப்ரா நடனம் ஆடியுள்ளார்.

பிரபல பாடகரும் ஹாலிவுட் நடிகருமான நிக் ஜோனாஸ், இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவை கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் ஹாலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டது. நிக் ஜோனாஸின் சகோதரர்கள், ’ஜோனாஸ் பிரதர்ஸ்’ என்ற பெயரில் 2005 ஆம் ஆண்டு இசைக் குழு ஒன்றை ஆரம்பித்து ஆல்பங்கள் வெளியிட்டு வந்தனர். இந்தக் குழு 2013 ஆம் ஆண்டு பிரிந்தது. தனித்தனியாக பாடி வந்தனர்.

இந்நிலையில் பிரிந்த சகோதரர்கள் ஆறு வருடத்துக்கு பிறகு இணைந்து ஒரே ஒரு பாடல் மட்டும் இடம்பெற்றுள்ள ’சக்கர்’ (Sucker) என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளனர். 

ஷோபி டர்னர், ஜோ ஜோனாஸ்

இதில், ஜோனாஸ் சகோதரர்களுடன் நிக் ஜோனாஸின் மனைவி நடிகை பிரியங்கா சோப்ரா, ’நிக்’கின் சகோதரர் ஜோ ஜோனாஸின் வருங்கால மனைவியும் ஹாலிவுட் நடிகையுமான ஷோபி டர்னர், மற்றொரு சகோதரர் கெவின் ஜோனாஸின் மனைவி டேனியல்லி ஆகியோ ரும் நடித்துள்ளனர். 

இதுபற்றி நிக் ஜோனாஸ் கூறும்போது, ‘’எங்கள் குடும்பத்துடன், இந்த இசை வீடியோவுக் கான படப்பிடிப்பை லண்டனில் நடத்தினோம். வித்தியாசமாக இருந்தது. இதை நீங்கள் விரும்புவீர்கள் என நினைக்கிறேன். இதில் பிரியங்கா மிகவும் அழகாக நடித்திருக்கிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா கூறும்போது, ‘’நிக்’குடன் பணியாற்றியது இதுதான் முதன்முறை. இதில் பணியாற்றியதை, வேலை என்று சொல்லிவிட முடியாது. ஜாலியான குடும்ப அனுபவமாக இருந்தது. பெருமையாக இருக்கிறது, ஹஸ்பெண்ட்’’ என்று குறிப்பிட்டுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close