[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 17வது மக்களவையின் இடைக்கால சபாநாயகராக வீரேந்திர குமார் பதவியேற்றார்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது தேர்தல் ஆணையத்தின் செலவை குறைக்கும், நேரத்தையும் குறைக்கும்- திருமாவளவன்
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்

ஓவியாவின் 90ML திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் !

due-to-technical-reasons-90ml-will-be-releasing-worldwide-on-march-1st

ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள 90 ML திரைப்படம் வெளியாகும் தேதி மாற்றப்பட்டுள்ளது.

பெண் இயக்குநர் அனிதா உதீப் இயக்கத்தில் நடிகை ஓவியா நடித்துள்ள திரைப்படம் ‘90 எம்.எல்’. அடல்ட் காமெடியாக இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது.  ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு உருவான நிலையில் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. 

ஆபாச வசனங்கள், முத்தக்காட்சிகள் என ட்ரெய்லர் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தது. ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடையே நல்ல பெயர் வாங்கிய ஓவியா, இது போன்ற அடெல்ட் படங்களில் நடிப்பதை தற்போது தவிர்த்து இருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். விமர்சனங்களுக்கு பதிலளித்த ஓவியா, விதையை வைத்தே பழத்தின் ருசியை தீர்மானிக்காதீர்கள் என்று பதிலளித்தார். இந்த திரைப்படம் வரும்  22 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. 

இந்நிலையில் தொழில்நுட்ப காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு மீண்டும் அறிவித்தது. அதன்படி 90 M L திரைப்படம் மார்ச் மாதம் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஓவியா, தொழில்நுட்ப காரணங்களால்  90M L திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 1ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டப்படி மார்ச்1ம் தேதி காலை 5 மணி காட்சியில் உங்களை சந்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆர்ஜே பாலாஜியின் எல்கேஜி திரைப்படத்துக்கும், உதயநிதி ஸ்டாலினின் கண்ணே கலைமானே படத்துக்கும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close