[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தி.மலையில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய சிறப்புக்குழுக்களை அமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா

பணம் பிடுங்கும் நோக்கில் படம் குறித்து தவறான விமர்சனம் - 'ப்ளூ சட்டை' மாறன் மீது புகார்

police-complaint-against-youtube-reviewer

சார்லி சாப்ளின் 2 படத்தின் இயக்குனர் ஷக்தி சிதம்பரம், இணைய தள விமர்சகர் மாறன் மீது சென்னை காவல் ஆணையரிடம் பு‌கார் அளித்துள்ளார்.

நடிகர் பிரபுதேவா நடித்து கடந்த வாரத்தில் வெளியான படம் சார்லி சாப்ளின் 2. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். படத்தை இயக்குனர் ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ளார். இந்த படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில், சார்லி சாப்ளின் 2 படம் குறித்து சமூக வலைதளமான யூ-டியூபில் தமிழ் டாக்கீஸ் என்ற என்ற பெயரில் தமிழ்மாறன் என்பவர் ஒரு விமர்சனம் செய்திருந்தார்.

அந்த விமர்சனமானது, படத்தில் இல்லாததை கூறி உண்மைக்கு புறம்பாக இருப்பதாகவும், அந்த விமர்சனத்தை கூறிய ப்ளூ சட்டை மாறன் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சென்னை காவல் ஆணையரிடம் இன்று புகார் மனு ஒன்றை அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் சிவா, "அனைத்து படங்களிலுமே தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் குறித்து தரக்குறைவாக மரியாதை இல்லாமல்  தமிழ்மாறன் பேசி வருகிறார். இதுகுறித்து பலமுறை நல்ல முறையில் எடுத்துக்கூறியும் அவர் மாற்றிக்கொள்ளவில்லை. அதை தொடர்ந்து தான் தற்போது நாங்கள் புகார் கொடுத்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய படத்தின் இயக்குனர் ஷக்தி சிதம்பரம், "தவறான விமர்சனம் குறித்து கேட்டபோது அதை நீக்குவதற்கு எனக்கு என்ன தருவீர்கள், எனக்கு என்ன கிடைக்கும் என ப்ளூ சட்டை மாறன் கூறினார். இதுபோன்று தொடர்ந்து பணம் பிடுங்கும் நோக்கில் இது போன்று தவறான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். இது குறித்த ஆதாரங்களை கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ளோம். விரைவில் பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள், தமிழ்மாறன் மீது புகார் கொடுப்பார்கள், என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close