[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

'கபாலி இசை உரிமையை பெற்றது பிரபல இசை நிறுவனம்!

think-music-get-kabali-teaser-rights

ரஜினி நடிப்பில் ‘மெட்ராஸ்’ பட இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் ‘கபாலி’. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பல உலக சாதனைகளை படைத்துள்ளது. வரும் 9-ஆம் தேதி ‘கபாலி’ படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த படத்திற்கான பாடல்கள் உரிமையை பிரபல இசை நிறுவனமான ‘திங்க் மியூசிக்’ (Think Music) நிறுவனம் பெற்றுள்ளது.

‘திங்க் மியூசிக்’ நிறுவனம் இதற்கு முன்னால் ரஜினியின் ‘எந்திரன்’, ரஞ்சித்தின் ‘அட்டக் கத்தி’, ‘மெட்ராஸ்’ மற்றும் கலைப்புலி தாணு தயாரித்த ‘கணிதன்’ விஜய் நடிப்பில் வெளிவந்த ‘தெறி’ படங்களின் பாடல்கள் உரிமைகளையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் நிச்சயம் ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close