[X] Close
NEWS
Puthiyathalaimurai-logo
JUST IN
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது

ரயிலை பிடிக்க ஓடி காயம்பட்ட “விஜய் தேவரகொண்டா”

vijay-deverakonda-train-stunt-went-wrong

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா ரயிலை பிடிக்க ஓடும் காட்சியில் கீழே விழுந்து காயமடைந்தார்.

தெலுங்கு திரையுலகில் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்த நடிகர்களில் ஒருவராக விஜய் தேவரகொண்டா உள்ளார். ‘பெல்லி சூப்பலூ’ என்ற படத்தில் அறிமுகமான இவர், ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தில் பிரபலமடைந்தார். இவர் நடித்த ‘கீதா கோவிந்தம்’ படத்தின் ‘இன்கேம், இன்கேம்.. இன்கேம் காவேலி’ பாடல் அண்மையில் ஹிட் ஆனாது. இதைத்தொடர்ந்து ‘நோட்டா’ என்ற தமிழ்படத்திலும் விஜய் தேவரகொண்டா நடித்தார். அந்தப்படம் எதிர்பார்த்த அளவிற்கு செல்லவில்லை. 


இந்நிலையில் ‘டியர் காம்ரேட்’ என்ற படத்தில் இவர் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு காக்கிநாடாவில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின்போது, ரயிலை பின்தொடர்ந்து பிடிக்க ஓடுவது போல காட்சி எடுக்கப்பட்டுள்ளது. அப்போது ரயிலின் அருகே சென்ற விஜய் தேவரகொண்டா தடுமாறி விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர் ரயிலில் சிக்காதவாறு தேவரகொண்டாவை இழுத்தபோது, அவருக்கு கையில் அடிபட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் அவர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close