[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் இருந்து டெல்லி செல்லும் முதலமைச்சர் பழனிசாமி டிச. 19ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார்
  • BREAKING-NEWS ஏலம் மூலமாக உள்ளாட்சிப் பதவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தப் பதவி செல்லாது - அமைச்சர் கடம்பூர் ராஜூ
  • BREAKING-NEWS டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பேருந்துகளுக்கு தீ வைப்பு
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்

நடிகர் அர்ஜூனை கைது செய்ய தடை விதித்தது கர்நாடக உயர்நீதிமன்றம்

karnataka-high-court-asks-police-not-to-arrest-arjun

நடிகை அளித்த புகார் தொடர்பாக நடிகர் அர்ஜூனை கைது செய்ய தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை #MeToo என்ற பிரசாரம் மூலம் வெளிப்படையாக தெரிவித்தனர். பாடலாசிரியர் வைரமுத்து மீதான பாடகி சின்மயின் புகார், ஆவணப்பட இயக்குனர் லீலா மணிமேகலை, இயக்குனர் சுசி கணேசன் மீது கொடுத்த பாலியல் புகார் என தமிழகத்தில் பரபரப்பு நிலவியது. அந்த வரிசையில் கன்னட நடிகை ஒருவர் நடிகர் அர்ஜூன் மீது பாலியல் புகாரை மீ டூ மூலம் வெளிப்படுத்தினர். அதாவது ‘விஷ்மயா’ படப்பிடிப்பின் ஒத்திகை காட்சி ஒன்றில் தவறான முறையில் அர்ஜூன் தன்னை தீண்டியதாக அவர் குற்றஞ்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக தனது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் புகார் எழுதியிருந்தார்.

 நடிகையின் புகாரை மறுத்திருந்த அர்ஜூன் அவர் மீது வழக்குப் பதிவு செய்வேன் எனக் கூறியிருந்தார். அர்ஜூனுக்கு ஆதரவாக எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இதனிடையே, தன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை மீது 5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு  கேட்டு பெங்களூரு நீதிமன்றத்தில் அர்ஜூன் மனுத்தாக்கல் செய்தார். இதனிடையே, 2015ம் ஆண்டு தனியார் சொகுசு விடுதியில் தன்னிடம் அர்ஜூன் அத்து நடந்து கொண்டதாகவும், தன்னுடைய அறைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும் அந்த நடிகை கப்பன்பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்நிலையில், நடிகை அளித்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு போலீசார் அர்ஜூன் மீது வழக்குப் பதிவு செய்தனர். பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தன் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அர்ஜூன் தரப்பினர் மனு தாக்கல் செய்தனர். 

அந்த மனு நீதிபதி தினேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. படத்தில் நடித்த காட்சிகளைக் கொண்டு அவர் மீது புகார் அளிக்கப்பட்டது என்றும் பொய்யான புகாரின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் வாதிடப்பட்டது. அர்ஜூன் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் அர்ஜூனை கைது செய்யக்கூடாது என்றும் அதே நேரத்தில் காவல்துறை விசாரணைக்கு தடை இல்லை என்றும் உத்தரவிட்டார்.
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close