[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

'இது என் கதைன்னு சொல்றது சரியில்லை' சர்கார் குறித்து இயக்குநர் ஷங்கர்

ace-film-director-throw-some-light-on-story-theft-issue-in-film-industry

'சர்கார்' திரைப்படத்தின் கதை தன்னுடையது என வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவரது குற்றச்சாட்டை ‘சர்கார்’ படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்தார். 42 நாட்கள் கடுமையாக உழைத்து முருகதாஸுடன் இணைந்து ‘சர்கார்’ படத்தின் கதையை உருவாக்கியதாக கதாசிரியர் ஜெயமோகன் தெரிவித்தார். 

இந்த நிலையில் வருண் ராஜேந்திரனுடன் சமரசம் செய்து கொள்வதாக முருகதாஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பட டைட்டிலில் வருண் ராஜேந்திரனுக்கு நன்றி தெரிவிக்கவும் படக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இருதரப்பினர் இடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து ‘சர்கார்’ படக் கதை தொடர்பான வழக்கு முடித்து வைக்கப்பட்டதால் நவம்பர் ஆறாம் தேதி படம் வெளியாக எந்தத் தடையுமில்லை.

இதுதொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “வழக்கம் போல் நிறைய வதந்தி இஷ்டத்துக்கு பரவிக்கிட்டு இருக்கிறது. அதற்கான ஒரு சின்ன விளக்கம்தான் இது. பாக்யராஜ் என்னை அழைத்து இதுபோன்ற ஒரு பிரச்னை சென்றுகொண்டிருக்கிறது எனக் கூறினார். கள்ள ஓட்டு பிரச்னையை மையமாக வைத்து 10 வருடங்களுக்கு முன்பு அருண் என்பவர் ஒரு கதையை பதிவு செய்துள்ளார். மற்றபடி இந்தக் கதைக்கும், அந்தக் கதைக்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது."

ஆனால், நமக்கு முன்னாடி ஒரு உதவி இயக்குநர் இப்படியொரு மூலக்கதையை பதிவு செய்திருக்கிறார். அவரை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் படத்தின் தொடக்கத்தில் ஒரு கார்டு போடுங்கள் என்று சொன்னார். சரி என்று நான் ஒத்துக் கொண்டேன். அந்த வகையில் மட்டுமே அவர் பெயர் வரும். மற்றபடி இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஏ.ஆர்.முருகுதாஸ்தான். அதில் எந்தமாற்றமும் இல்லை.” என்று கூறினார்.

ஆனந்த விகடன் வார இதழுக்கு இயக்குநர் ஷங்கர் அளித்தப் பேட்டியில் கதை திருட்டு விவகாரம் குறித்து பேசியுள்ளார் அதில் " எந்திரன் கதையின் மீது கூட அப்படி ஒரு வழக்கு இருக்கு. அடுத்தவங்க கதையைத் திருடிப் பண்ணணும்னு அவசியம் இல்லையே. நமக்கு தோன்றும் கற்பனையை அழகா வளர்த்து வடிவம் கொடுத்துப் பண்ணினோலே போதும். திருடித்தான் பண்றோம்னா அடுத்தடுத்து பண்ணிட்டே இருக்கலாமே. அதுக்கு இவ்வளவு கால அவகாசம் தேவையில்லையே. அப்படி எதாச்சும் கதை பிடிச்சா காசு கொடுத்து காப்பிரைட்ஸ் வாங்கி பண்ணப்போறோம்"

அந்தப் பேட்டியில் மேலும் தொடர்ந்த ஷங்கர் " நண்பன் அப்படிப் பண்ணின படம்தானே. ஏழைப் பையன் ஒரு பணக்கார வீட்டுப் பெண்ணைக் காதலிச்சான்னு 200 கதைகள் வரும். என் கதையிலும் அது இருக்கு. கதையை திருடிட்டாங்கன்னு எப்படிச் சொல்ல முடியும். மூணு மணிநேரப் படத்தை இழை இழையா பின்னிப் பின்னிப் கொண்டுவர்ற உழைப்பை, ஏதோ ஒன்றிரண்டு விஷயங்களை வெச்சு, இது என் கதைனு சொல்றது சரியில்லை. எனக்கு தெரிஞ்சு நம் இண்டஸ்ட்ரியில் படைப்பாளிகளிடம் நேர்மை இருக்கு. அவங்க மனசுல உதிச்சதைத்தான் பண்றாங்கனு நம்புறேன்" என தெரிவித்துள்ளார் ஷங்கர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close