[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

2.0 டிரைலரும் 3டியில் ! தினசரி வெளியாகும் புதுப்புது போஸ்டர்கள்

2-0-trailer-is-in-3d-on-november-3-director-shankar

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் ட்ரைலர் நவம்பர் 3-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில். இப்போது தியேட்டரில் இந்தப் படத்தின் டிரைலரை ரசிகர்கள் 3டியில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2.0 படத்தின் புதுப்புது போஸ்டர்களை அதன் இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தினசரி பகிர்ந்து வருகிறார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் ட்ரைலர் நவம்பர் 3-ஆம் தேதி வெளியாகும் என இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் 2.0 படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த வருடம் அக்டோபர் மாதம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதனை தொடர்ந்து பல கட்டங்களில் படத்தின் புரமோஷன் செய்திகள் வெளியாகின. படத்தின் விஎஃப்எக்ஸ் வேலைகள் தாமதமாவதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாக செய்தி வெளியானது. இதனைதொடர்ந்து விநாயகர் சதூர்த்தி அன்று ‘2.0’ படத்தின் டீசரை வெளியிட திட்டமிட்டிருப்பதாக ஷங்கர் கூறியிருந்தார். அதன்படி செப்டம்பர் 13 தேதி காலை 9 மணிக்கு வெளியானது.

2டி டீஸர் யூடியூப் இணையதளத்திலும், 3டி டீஸர் தியேட்டர்களிலும் வெளியானது. டீசர் யுடியூப்பில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்தது. முதல் நாளில் ஏறக்குறையை டீசரை 50 லட்சம் பேர் கண்டுகளித்தனர். இதனையடுத்து 2.0 படத்தின் விஎஃப்எக்ஸ் (VFX) உருவாக்கம் குறித்த காட்சிகளுடன் கூடிய புதிய மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. படத்தின் இயக்குநர் ஷங்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில் அதனை வெளியிட்டார். உலகின் பிரபலமான 25 ஸ்டூடியோக்களில் 1000 கலைஞர்களால் இந்த விஎஃப்எக்ஸ் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றனர்.

இந்தியாவில் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்துக்காக 75 மில்லியன் டாலர் செலவிடப்பட்ட திரைப்படம் 2.0 என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்திய ரூபாயின் மதிப்பில் 75 மில்லியன் என்பது கிட்டத்தட்ட 543 கோடி இதனால் அசந்துப்போனார்கள் ரசிகர்கள். இதன் காரணமாக அந்த மேக்கிங் வீடியோவை அப்போது ரஜினி ரசிகர்கள் பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் ஷேர் செய்தனர்.இந்நிலையில் அண்மையில் இயக்குநர் ஷங்கர் புதிய போஸ்டர்களை வெளியிட்டு ட்வீட் செய்து வருகிறார். "அதில் இந்த பிரம்மாண்டத்தை கொண்டு வர கிட்டத்தட்ட 3 ஆயிரம் தொழில்நுட்ப கலைஞர்கள் உழைத்திருக்கிறார்கள்" என பதிவிட்டிருந்தார். இதனைதொடர்ந்து 2.0 படத்தின் ட்ரைலர் நவம்பர் 3-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 2.0 படம் நவம்பர் 29-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close