[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

நடிகைகள் புகார்: நடிகர் சங்கத்துக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

kerala-hc-issues-notice-to-amma

மலையாள நடிகர்கள் சங்கத்தில், பாலியல் புகார் குறித்து விசாரிக்கக் குழு அமைக்கக் கோரி, திரைப்பட பெண்கள் கூட்டமைப் பு தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்றம் நடிகர் சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கேரளாவில் பிரபல நடிகை ஒருவர் 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மலையாள நடிகர் சங்கமான ’அம்மா’வில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந் நிலையில் ’அம்மா’வின் தலைவராக இருந்த இன்னசென்ட் பதவியில் இருந்து விலகியதை அடுத்து மோகன்லால் தலைவர் ஆனார். அவர் பதவியேற்றதும் திலீப்பை சங்கத்தில் மீண்டும் சேர்த்தனர்.

இந்த முடிவுக்கு ரேவதி, பார்வதி, பத்மப்பிரியா, ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட திரைப்பட பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடிகர் சங்கத்தில் இருந்தும் விலகினர். 

இதையடுத்து திலீப்பை மீண்டும் சேர்ப்பது பற்றிய தங்கள் முடிவை ’அம்மா’ மாற்றியது. இந்நிலையில் நடிகர் திலீப், ‘நிரபராதி என்று நிரூபித்துவிட்டு சங்கத்தில் இணைகிறேன்’ என்று கூறினார்.

திலீப்பை சங்கத்தில் சேர்க்க தீர்மானம் நிறைவேற்றியதற்கு விளக்கம் அளிக்கும்படி ரேவதி, பார்வதி, பத்மபிரியா, ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பினர். இதுகுறித்து ரேவதி கூறும்போது, ‘நடிகர் சங்கத்தில் திலீப் இருக்கிறாரா? இல்லையா? என்பதை சங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்று விளக்கம் கேட்டோம். பதில் இல்லை. பாலியல் விவகாரங்களில் ஈடுபடும் சங்க உறுப்பினர்களின் குற்றம் நிரூபிக்கப் பட்டால் அவர்களை நிரந்தரமாக நீக்க சங்க விதியில் திருத்தம் கொண்டு வரும்படி கோரினோம். அதற்கும் பதில் இல்லை’ என்றார்.

திலீப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் அதன் அடிப்படையில் அவரை சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

‘நடிகர் திலீப் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டரீதியான ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. அது தெரிய வந்ததும் திரைப்பட பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நடிகைகளுக்கு பதில் அனுப்பி வைக்கப்படும். பொதுக்குழு கூடும் வரை அவர்கள் அமைதிகாக்க வேண்டும்’ என்று ’அம்மா’ செயற்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்தார். இதற்கிடையே நடிகர் திலீப் தனது ராஜினிமா கடிதத்தை நடிகர் மோகன்லாலுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில், கேரளத் திரைப்பட பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நடிகைகள், கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. மலையாள சினிமாவில் இதுபோன்ற குழு இதுவரை அமைக்கப்படவில்லை. பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்தக் குழுவை அமைக்க, மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தனர். 

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், ஜெயசங்கரம் நம்பியார் அடங்கிய அமர்வு இது தொடர்பாக, மலையாள நடிகர் சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close