[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

கேரளாவில் விஜய்யின் பழைய சாதனையை முறியடித்த ‘சர்கார்’ 

sarkar-sets-a-new-alltime-kollywood-record-in-kerala

விஜய் மார்கெட் லெவல் கேரளாவில் புதிய சாதனையை படைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘சர்கார்’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 2ம் தேதி மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. அப்போது பேசிய விஜய் பல அரசியல் சர்ச்சைகள் குறித்த கருத்துகளை கூறியிருந்தார். இந்நிலையில் கேரளாவில் ‘சர்கார்’ படத்தின் வெளியீட்டு உரிமை 8.1 கோடிக்கு விலை போய் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 

பொதுவாக விஜய்யின் படங்கள் கேரளாவில் பெரிய அளவுக்கு வெற்றியை ஈட்டும். அவரது முந்தைய படங்களான ‘போக்கிரி’, ‘துப்பாக்கி’, ‘கத்தி’, ‘தெறி’, ‘மெர்சல்’ என அனைத்து படங்களும் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தன. அந்த வரிசையில் ‘சர்கார்’படத்தின் மலையாள டப்பிங் உரிமை இந்தளவுக்கு விற்பனையாகி உள்ளது. இது விஜய்யின் முந்தையை படங்களை முறியடித்த சாதனையாகும். 

விஜய், சமீபத்தில் கேரளாவில் நிகழ்ந்த வெள்ள பாதிப்பிற்கு 70 லட்சம் ரூபாயை அளித்திருந்தார். அவரது ரசிகர்கள் சார்பில் இந்தத் தொகை வழங்கப்பட்டது. வெள்ளத்தால் பாதித்த மக்களுக்குண்டான அடிப்படை தேவைகளுக்கு இந்தப் பணத்தை பயன்படுத்த வேண்டி அவர் அறிவுறுத்தியிருந்தார். ஆகவே அவரது ரசிகர் வட்டத்தை தாண்டி விஜய்யின் செல்வாக்கு கேரளாவில் உயர்ந்தது. அதன் அடிப்படையில்தான் ‘சர்கார்’பட உரிமை இந்தளவுக்கு விலை போய் உள்ளது எனக் கூறப்படுகிறது. 

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close