[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்

’என் வெயிட் எப்படி இருந்தா உங்களுக்கு என்ன?’: நித்யா மேனன் கோபம்!

i-don-t-care-about-my-weight-nithya-menon

தமிழில் 180, வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, மெர்சல் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகை நித்யா மேனன். இவர் கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார். இவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ’த அயர்ன் லேடி’யிலும் நடித்துவருகிறார். 

இந்நிலையில் இவர் குண்டாக இருப்பது பற்றி சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சித்திருந்தனர். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, 'எனது உடல் எடை பற்றி சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள். இதற்கு பதில் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இதுபற்றி பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். எனது உடல் எடை பற்றி கவலைப்படுவதில்லை. அது பற்றி எனக்கே கவலை இல்லாதபோது மற்றவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? என் எடையை குறைக்க வேண்டும் என்று நான் நினைத்தால் அதற்கு ஒரு மாதம் போதும். பழைய ஹீரோயின்கள் எல்லோரும் குண்டாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

அதற்காக தயாரிப்பாளர்கள், படம் தயாரிப்பதை நிறுத்திவிட்டார்களா என்ன? நடிப்புதான் முக்கியம். உடல் எடை அல்ல. யாராவது, நான் உடல் எடையை குறைத்தால்தான் அவர்கள் படத்தில் நடிக்க முடியும் என்று விரும்பினாலும் அவர்கள் என்னில் இருந்து விலகியே இருக்கலாம்’ என்று தெரிவித்துள்ளார்.


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close