[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்

லக்னோ ஆக்‌ஷன் காட்சியில் ரஜினி: கசிந்தது ‘பேட்ட’ வீடியோ

rajinikanth-shooting-for-petta-in-lucknow-gets-mobbed-by-fans

ரஜினிகாந்த் பங்கேற்றுள்ள ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளன. 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு லக்னோவில் நடைபெற்று வருகிறது. அந்தப் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் பங்கேற்று நடித்து வருகிறார். அதனையடுத்து காசி உள்ளிட்ட வட இந்தியாவில் மேலும் சில இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மொத்தம் 45 நாட்கள் இந்தப் படப்பிடிப்பு நடைபெற உள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

 விஜய்சேதுபதிக்கும் ரஜினிக்குமான சண்டைக்காட்சிகள் படமாக்கப்படும் என ஏற்கெனவே வெளியான செய்திகள் தெரிவித்தன. அதனையொட்டி இன்று ரஜினிகாந்த் சண்டைக்காட்சியில் பங்குபெற்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளமான ட்விட்டரில் பரவி வருகிறது. மேலும் படம் சம்பந்தப்பட்ட ஒரு வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

இதனையடுத்து நடைபெற உள்ள காசியில் படப்பிடிப்பில் காட்சிகளில் த்ரிஷா பங்கேற்க இருக்கிறார். லக்னோவில் விஜய்சேதுபதி, ரஜினி ஆகிய இருவருக்குமான காட்சிகளை மட்டும் எடுக்க திட்டமிடுள்ள இயக்குநர், த்ரிஷா சம்பந்தப்பட்டகாட்சிகளை படத்தின் ப்ளாஷ் பேக்கில் பயன்படுத்த உள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில் 5 நாட்கள் மட்டும் சென்னை திரும்பும் ரஜினி மன்ற பணிகளில் ஈடுபட உள்ளார். 

‘பேட்ட’ படத்தை வரும் ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close