[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

‘சாமி2’ புது ட்ரெய்லர் எப்படி இருக்கு? 

saamy-2-trailer-expect-power-packed-video-from-vikram-starrer

‘சாமி2’ படத்தின் 2வது ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. 

விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளியான படம் ‘சாமி’. அதன் வெற்றியை அடுத்து இயக்குநர் இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கி முடித்துள்ளார். அதன் முதல் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி இருந்த வேளை இப்போது இப்படத்தின் இரண்டாம் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமாக 2 நிமிடம் 8 நொடிகள் வரை நீளும் இந்த ட்ரெய்லரில் பழைய சீயான் விக்ரம் அப்படியே திரும்ப வந்திருக்கிறார். நினைத்தால் உடம்பை ஏற்றவும் குறைக்கவும் தெரிந்த வைத்துள்ள விக்ரம், ஒரு மேஜிக் விருந்தையே ரசிகர்களுக்கு வைத்துள்ளார்.

வழக்கமான விமானம், ஹெலிகாப்டர், டாடா சுமோ என அத்தனை சமாச்சாரங்களும் ஹரியை திரும்ப நிரூபித்து கட்டி இருக்கிறது. ‘ஒரு சாமி..இரண்டு சாமி..’ டயலாக் ட்ரெய்லர் தொடக்கத்திலேயே மறக்காமல் இடம்பிடித்துள்ளது. காட்சிகள் முழுக்க கழு பார்வையில் தரையை அளந்து காட்டி உள்ளன. காடு மலை, மேடு பள்ளம் என வேகம் வெறித்தனமாக கூடி இருக்கிறது. அதற்கு தக்க விக்ரமின் வேகமும் இருப்பது ஆச்சர்யம். இந்த மனிதருக்கு வயதே ஆகாதா என யோசிக்க வைக்கிறார் விக்ரம். அவருக்கும் கீர்த்தி சுரேஷுக்குமான காம்பினேஷன் கச்சிதமாக காட்சியில் தெறிக்கிறது. 

பாடல்களில் தேவிஸ்ரீ பிரசாத் பழைய சாயலையை கலந்து விட்டிருக்கிறார். ‘பெண்ணே உன்னை பார்த்தா நெஞ்சில் புது ட்யூன்’ பாடல் வரியில் புதிய வாசனையை காட்ட முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அது ஏனோ நடக்கவில்லை. ‘நீ நடந்து வரும் ஸ்டைலு அது புது மெட்ரோ ரயிலு’என சமகால சென்னையை சொல்ல முயற்சித்துள்ளன. காட்சிகள் கலர்ஃபுல்லாக அமைந்துள்ள அளவுக்கு மெட்டுக்கள் ஏனோ புதுசாக ஒலிக்கவில்லை. அங்கெங்கே ஷங்கர் பட வண்ணக்கலவைகள் வந்து போவதையும் உணர முடிகிறது. சரியாக கணக்கிட்டு சொன்னால் இது இரண்டாவது ட்ரெய்லர்தான்.

ஆனால் ஒரு படத்தின் இரண்டாவது ட்ரெய்லரே இந்தளவுக்கு சிறப்பாக இருக்க முடியுமா என யோசிக்க வைத்திருக்கிறார் ஹரி. அந்த வகையில் ‘சாமி2’ படக்குழுவிற்கு இது பெரிய வெற்றிதான். ட்ரெய்லர் முழுக்க டமால், டுமில் என்று சத்தம் செம. அதே அளவுக்கு சாதிப்பாரா சாமி என காத்திருக்க வைத்திருக்கிறது இந்த ட்ரெய்லர்.  

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close