[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ரஜினியை அடுத்த மாதம் களத்தில் சந்திக்கப் போகும் விஜய்சேதுபதி 

vijay-sethupathi-to-shoot-for-rajinikanth-s-film-from-next-month

ரஜினிகாந்த் படத்தில் விஜய்சேதுபதி அடுத்த மாதம் கலந்து கொள்ள இருக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் முதன்முறையாக ரஜினிகாந்த்துடன் விஜய்சேதுபதி சேர்ந்து நடிக்க இருக்கிறார். இந்தக் கூட்டணி தமிழ் சினிமாவிற்கு புதிது என்பதால் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 40 நாட்கள் டேஹ்ராடூனில் நடைபெற்றது. இதில் ரஜினி பங்கேற்றிருந்தார். மேலும் பாபி சிம்ஹாவும் உடன் கலந்துக் கொண்டிருந்தார். பொதுவாக தனது படங்களின் முழுக் கதையையும் கேட்ட பின்பே விஜய்சேதுபதி நடிக்க சம்பதிப்பது வழக்கம். ஆனால் இதில் நடிப்பதற்கு முன் கதையை பற்றி ஒரு வார்த்தைக்கூட அவர் கேட்கவில்லை. காரணம், ரஜினி. அவருடன் இணைந்து நடிப்பதாலும் மேலும் தனது விரும்பமான இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படத்தை இயக்குவதாலும் அவர் கதை கேட்கவே இல்லை. இப்படத்தின் விஜய்சேதுபதி வில்லன் ரோலில் நடிக்க உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. அதில் ரஜினிகாந்த் மற்றும் விஜய் சேதுபதி காட்சிகளை படக்குழு படமாக்க உள்ளது. அதற்காக முழு எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார் விஜய்சேதுபதி. இப்படத்தில் முனிஷ்காந்த், மேஹா ஆகாஷ், தீபக் ரமேஷ் என பலர் நடித்து வருகின்றனர். ரஜினி படத்திற்கு அனிருத் முதன்முறையாக இசையமைக்கிறார். 

இந்தப் படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு ரஜினி முழு நேர அரசியல் களத்தில் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close