[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு
  • BREAKING-NEWS மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி
  • BREAKING-NEWS ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS கேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு
  • BREAKING-NEWS சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
  • BREAKING-NEWS பிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் - உள்துறை அமைச்சகம்

ரஜினியுடன் மோதும் வில்லன் ஃபஹத் ஃபாசில்? 

fahadh-faasil-in-rajinikanth-s-film-with-karthik-subbaraj

ரஜினிகாந்த் படத்தில் ஃபஹத் ஃபாசில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மேற்கு வங்கம் டார்ஜிலிங் பகுதியில் நடைபெற்று வந்தது. இந்தப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ரஜினிகாந்த் அங்குள்ள ராமகிருஷ்ணா மடத்திற்கு சென்று அங்குள்ள ஆன்மிக தலைவரிடம் ஆசி பெற்றுவிட்டு சென்னை திரும்பினார். இந்தப் படத்தில் ரஜினியுடன் முதன்முறையாக விஜய்சேதுபதி இணைந்து நடிக்க உள்ளார். அவர் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் பாபி சிம்ஹாவும் இதில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் ரஜினியுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் கசிந்து வருகிறது. இவர் ஏற்கெனவே சிவகார்த்திகேயன் நடித்த ‘வேலைக்காரன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். ஆனால் இந்தச் செய்தியை படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. படத்தில் ஒரு சுவாரஸ்யமான கதாப்பாத்திரத்திற்கு சரியாக பொருந்தக் கூடிய தோற்றத்தில் ஃபஹத் இருப்பதால் அவரை இயக்குநர் தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close