[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்
  • BREAKING-NEWS தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்
  • BREAKING-NEWS ஏப்ரல் 18ல் பிரதமர் மோடியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் முடிவு செய்ய வேண்டும் - கள்ளக்குறிச்சி வேட்பாளர் கௌதம் சிகாமணியை ஆதரித்து சேலம் உடையாப்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை
  • BREAKING-NEWS புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக மார்ச் 31ல் கமல்ஹாசன் பரப்புரை - மக்கள் நீதி மய்யம் மக்களவை தேர்தல் வேட்பாளர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன்

“விஜய் என் நடிப்பை பார்த்து பாராட்டினார்” - ‘சர்கார்’ பற்றி வைஷாலி 

vijay-sir-appreciated-my-performance-in-sarkar-vaishali-thaniga

நடிகை வைஷாலி தனிகா தனது ‘சர்கார்’ பட அனுபவங்களை பற்றி பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் திரைப்படம் ‘சர்கார்’. அதன் ஃபர்ஸ்ட் லுக் விஜய் பிறந்த நாளையொட்டி கடந்த 21 தேதி வெளியானது. மேலும் அடுத்தடுத்த இரண்டு படங்களும் வெளியிடப்பட்டன. அந்தப் புகைப்படத்தில் விஜய் சிகரெட் பிடிப்பதை போல காட்சி இருந்ததால் வழக்கம் போல் சர்ச்சை எழுந்தது. விஜய் படங்கள் எப்போதும் வெளியாகும் நேரத்தில்தான் சர்ச்சை வெடிக்கும். ஆனால் அதற்கு நேர்மாறாக இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான போதே சர்ச்சை எழுந்தது. 

இந்நிலையில் இந்தப்படத்தில் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து நடித்துள்ள வைஷாலி தனிகா தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். ‘சர்கார்’ பற்றிய செய்திகள் மிக ரகசியம் காக்கப்பட்டு வரும் நிலையில் இவரது பேட்டி படத்தை பற்றிய எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. அவர் தந்துள்ள பேட்டியில், “நான் ‘சர்கார்’ படத்தில் ஒரு பங்காக இருக்கிறேன். மேலும் ‘சீமராஜா’, ‘யங்க் மங் சங்’ போன்ற படங்களிலும் நடித்து வருகிறேன். நான் ஏற்கெனவே விஜய் சாரின் ‘பைரவா’வில் நடித்திருந்தேன். ஆனால் திரையில் விஜய்யுடன் பகிர்ந்து கொள்கின்ற மாதிரியான காட்சிகள் அமையவில்லை. ஆனால் இப்போது நான் சந்தோஷமாக இருக்கிறேன். நான் ‘சர்கார்’ படத்தில் அவருடன் சிறிய காட்சியில் இணைந்து நடித்துள்ளேன். நான் பேசும் விதத்தில் அக்காட்சி உள்ளது. விஜய்யுடன் சேர்ந்து வேலை செய்தது சிறப்பாக இருந்தது. அவர் மிகவும் சாதுவாக என்னிடம் நடந்து கொண்டார். மேலும் எனது காட்சியை பார்த்துவிட்டு பாராட்டினார் விஜய்” என்று கூறியுள்ளார்.

வைஷாலி தனிகா தொலைக்காட்சி தொடர்கள் மூலம் அதிகம் அறியப்பட்டவர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close