[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
  • BREAKING-NEWS ஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

டிவி நடிகையுடன் ’தசாவதாரம்’ இசை அமைப்பாளர் மறுமணம்!

himesh-reshammiya-marries-actor-sonia-kapoor

இசை அமைப்பாளரும் ஹீரோவுமான ஹிமேஷ் ரேஷம்மியா டிவி நடிகையை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.

தமிழில் பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம், கமல்ஹாசனின் தசாவதராம் படங்களுக்கு இசை அமைத்தவர் இந்திப் பட இசை அமைப்பாளர் ஹிமேஷ் ரேஷம்மியா. இவர் இப்போது ஹீரோவாகவும் இந்தியில் நடித்து வருகிறார். இவரது மனைவி கோமல். இவர்களுக்கு ஸ்வயம் என்ற மகன் உள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன் கோமலும் ஹிமேஷும் பிரிந்தனர். பின்னர் விவாகரத்துப் பெற்றனர்.

இதையடுத்து ஹிமேஷ், தனது நீண்ட நாள் தோழியும் டிவி நடிகையுமான சோனியா கபூரைக் காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி இவர்கள் திருமணம் நேற்று நள்ளிரவு மும்பையில் உள்ள ஹிமேஷ் வீட்டில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். வேறு யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.

நண்பர்கள் மற்றும் திரையுலகினருக்காக மற்றொரு நாளில் வரவேற்பு விழா நடத்தப்படும் என ஹிமேஷ் தெரிவித்துள்ளார். திருமணப் புகைப்படங்கள் இப்போது வெளியாகியுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close