[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

ஸ்ரீதேவி மரணம்: கமல் -ரஜினி இரங்கல்

sridevi-s-death-kamal-rajini-mourning

தமிழில் ஸ்ரீதேவியுடன் அதிக படங்களில் நடித்த கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் தங்களது இரங்கலை பதிவு செய்துள்ளனர்.

நான்கு வயதில் திரையுலகில் அறிமுகமாகி தனித்திறமையாலும், கவர்ந்திழுக்கும் நடிப்பாலும் திரை ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தவர் ஸ்ரீதேவி. துபாயில் திருமண விழா ஒன்றில் பங்கேற்க குடும்பத்துடன் சென்ற நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மறைந்திருக்கிறார். இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் இறப்புக்கு ட்விட்டரில் தனது இரங்கலை பதிவுசெய்துள்ள நடிகர் கமல்ஹாசன்,  “மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை கன்னி மயிலாக, கண்ணியமான மனைவியாக, பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்த்து மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த், “ நடிகை ஸ்ரீதேவியின் மரணம் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது . ஒரு அன்பான நண்பரை இழந்துவிட்டேன் . திரைத்துறை ஒரு சகாப்தத்தை இழந்துவிட்டது. ஸ்ரீதேவியின் குடும்பத்தினர், நண்பர்களை போன்று நானும் அந்த வலியை உணர்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

தமிழில் ஸ்ரீதேவியுடன் அதிக படங்களில் நடித்த கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் தங்களது இரங்கலை பதிவு செய்துள்ளனர். ஸ்ரீதேவி கதாநாயகியாக அறிமுகமான படத்தில் அவருடன் ரஜினியும் - கமலும் நடித்திருந்தனர். அதன் பின்னர் இவர்கள் மூவரும் இணைந்து நடித்து வெளியான 16 வயதினிலே படம் பெரிதும் பேசப்பட்டது. 

மூன்றாம் பிறை, பாலுமகேந்திராவின் தேசிய விருது வாங்கிய படம். மனநலம் பாதித்தவராக மிரட்டிய ஸ்ரீதேவி, இன்றும் பலர் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். இந்தப் படத்துக்காக கமலுக்கு தேசிய விருது கிடைத்தது. ஸ்ரீதேவிக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும் என்ற விமர்சனம் அப்போது எழுந்தது. மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்த படம். இந்தப் படத்தில் ஸ்ரீதேவி, அர்ச்சனா என்ற கேரக்டரில் பாடகியாக கலக்கி இருப்பார். இவையெல்லாம் அந்தக்காலகட்டத்தில் பெரிதும் பேசப்பட்ட படங்கள்.

இதைதான் தற்போது கமல் தனது இரங்கலில் நினைவுக்கூர்ந்துள்ளார். குழந்தை, கன்னி மயிலாக, கண்ணியமான மனைவியாக, பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்த்து மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமை தான் என்று கூறியுள்ளார். ரஜினியும் தனது அன்பான தோழியை இழந்து விட்டேன் என பதிவிட்டிருக்கிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close