[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சர்ச்சைக்குரிய ஓவர் த்ரோ ரன்கள் - மவுனம் கலைத்தது ஐசிசி
  • BREAKING-NEWS என்.எல்.சி ஊழியரை அடித்துக் கொன்ற மனைவி - விசாரணையில் அம்பலம்
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்
  • BREAKING-NEWS ‘சரவணபவன்’ ராஜகோபால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS நடு ரோட்டில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக் கொலை - தகாத உறவு காரணமா?

வெறித்தனமாக பாக்ஸிங் செய்யும் த்ரிஷா!

trisha-boxing-video-trisha-images

நடிகை த்ரிஷா பாக்ஸிங் பயிற்சி பெறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவராக திகழ்ந்தவர் த்ரிஷா. சமீப காலமாக இவர் தமிழ்ப் படங்களில் குறைவாகவே நடித்து வருகிறார். இருப்பினும் சிம்ரனுக்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றவர் த்ரிஷா தான். இவர் நடிகர் விஜய் உடன் இணைந்து ‘கில்லி’ படத்தில் ‘அப்படிப்போடு’ பாடலுக்கு போட்ட ஆட்டம் பட்டி தொட்டி எல்லாம் பரவியது. அதைத் தொடர்ந்து விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களின் ஜோடியாக த்ரிஷா வலம் வரத் தொடங்கினார். நயன்தாரா, அசின் போன்ற நடிகைகள் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்திருந்த போதிலும் த்ரிஷாவிற்கு என ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது. அதை இயக்குநர் கவுதம் மேனன் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் நிரூபித்தார்.

இந்நிலையில் சமீப காலமாக தமிழ் திரைப்பட மார்க்கெட்டில் பொலிவின்றி காணப்படும் த்ரிஷா, தற்போது ட்விட்டரில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் அவர் பரபரப்பாக பாக்ஸிங் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார். இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் ஒன்றிற்காக இந்த பயற்சியை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close