[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

காதலர் தினத்தில் குடும்ப வாழ்க்கைக்கு 'குட் பை' சொன்ன இளம் நடிகர்

actor-yuthan-balaji-divorced-his-wife-at-valantinesday

பிப்ரவரி 14 அன்று தனது திருமண வாழ்க்கைக்கு இளம் நடிகர் ஒருவர் குட் பை சொல்லியிருக்கிறார்.

நாற்பது வருட திருமண வாழ்க்கை என பெருமை பேசிக் கொண்டது எல்லாம் அந்தக் காலம். காலையில் கல்யாணம் மாலையில் பிரேக் அப் என பிச்சிக் கொண்டு பிரிவதுதான் இன்றைய லைஃப் ஸ்டைல். உலகமே காதல் ரொமான்ஸ்‘மூட்’டில் மூழ்கியிருந்த நேரத்தில் தனது குடும்ப வாழ்க்கைக்கு முழுக்குப் போட்டிருக்கிறார் இளம் நடிகர் யுதன் பாலாஜி. பிரபல தொலைக்காட்சி தொடர் மூலம் அறிமுகமான இவர்  ‘பட்டாளம்’, ‘காதல் சொல்ல வந்தேன்’, ‘நகர்வலம்’ என பல படங்களில் திரையில் தோன்றினார்.

2016 ஆண்டு ஜூன் மாதம் இவருக்கும் ப்ரித்திக்கும் திருமணம் நடந்தது. அந்தத் திருமண விழாவிற்கு விஜய்சேதுபதி உட்பட பல பிரபலங்கள் வந்து வாழ்த்து தெரிவித்தனர். திருமணம் முடிந்து முழுதாக இரண்டு வருடங்கள் கூட இல்லை. அதற்குள் மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாகவும், நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதாகவும் சமூக வலைதளத்தில் அறிவித்திருக்கிறார் யுதன். இந்த முடிவை இருவரும் சேர்ந்துதான் எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். காதலர் தினத்தில் ஒரு இளம் ஜோடி பிரிவதை கண்டு சமூக வலைதளத்தில் கவலை தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close