[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

நடிகர் சங்கத்திற்குள் என்ன சர்ச்சை? 

what-is-the-controversy-within-the-actors-association

தமிழ்த் திரை உலகுல கடந்த இரண்டு நாட்களா அதிகம் விமர்சனத்துக்குள்ளான விஷயம் நடிகர் சங்கம் நடத்தின நட்சத்திர விழாதான். இந்த விழாவுக்கு அழைத்து செல்லப்பட்ட நட்சத்திரங்களுக்கு சங்க நிர்வாகிகள் சரியான மரியாதை கொடுக்கலனு எஸ்.வி சேகர் குற்றசாட்டு முன்வெச்சிருக்காரு. அதேபோல இந்த விழாவுக்கு நடிகர் அஜித்த அழைத்த போது அவர் மக்கள் கொடுக்கும் தியேட்டர் கட்டணத்துல நிறைய சம்பாதிக்கிறோம், அதனால நம்முடைய பணத்தை செலவழிச்சு நடிகர் சங்கத்தை கட்டுவோம்னு சொன்னதா கூறியிருக்காரு. மேலும் தன்னுடைய கருத்துகளை நடிகர் சங்க நிர்வாகிகள் முறையா ஏற்க மறுக்குறாங்க. 

அதனால தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலர் பொறுப்புல இருந்து விலகிக்கிறதாவும் கடிதம் எழுத்தியிருக்காரு. எஸ்.வி சேகருடைய இந்த முடிவுக்கு காரணம் என்னனு நடிகர் சங்கத்தை சார்ந்தவங்ககிட்ட விசாரிச்ச போது சில விஷயங்களை பகிர்ந்துக்கிட்டாங்க. அதாவது சரத்குமார் தலைமையிலான நிர்வாகம் இருந்த போது பல முறைகேடுகள்  நடந்திருக்கு. 

சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை தனியாருக்கு கொடுத்தது தவறுனு விஷால் தட்டிக்கேட்டாரு. அந்தச் சமயத்துல விஷால் அணியில எஸ்.வி சேகர் தன்னை இணைச்சுக்கிட்டாரு. இதுக்கு பின்னாடி தேர்தலை சந்திச்ச விஷால் அணியினர், சரத்குமார் அணியினரை தோற்கடித்து நிர்வாகத்துக்கு வந்தாங்க. இந்த அணியில இருந்த எஸ்.வி.சேகர் வந்திருக்க எல்லாம் புதியவர்கள் இவர்களை நாம இயக்கிக்களாம்னு கணக்கு போட்டிருக்காரு. 

ஆனா புதிய நிர்வாகிகள் சங்க விதிகளையும், சங்கம் நடத்து முறைகளை சரியா தெரிஞ்சு வெச்சிருந்ததால எஸ்.வி சேகருக்கு ஏமாற்றமா இருந்திருக்கு. இதனால நீண்ட நாட்களாகவே அதிருப்தியில இருந்த அவர், ராதாரவி, ஜே.கே ரிதீஸ் அணியில இணைந்து நடிகர் சங்கத்தின் நிர்வாகத்துக்கு எதிராக செயல்பட்டிருக்காரு.

இவருடைய தூண்டுதல் காரணமாகதான் நடிகர் சங்க நிலத்துல சாலையிருக்கு, தபால் நிலையம் இருக்குனு புதுப்புது வழக்குகள் போடப்பட்டுச்சுனும் சொல்றாங்க. இப்ப அதெல்லம் தாண்டிதான் அந்த இடத்துல கட்டிடம் கட்டும் வேலைகளை தொடங்கியிருக்காங்க. 
இது போல பல பிரச்சனைகளை எஸ்.வி சேகர் மறைமுகமா செய்து வந்தாலும் அதை எல்லாம் கண்டுக்காமதான் இருந்திருக்கு சங்க நிர்வாகம்.

ஆனா கடந்த மாதம் நடந்த தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுவில் கலந்துக்கிட்ட எஸ்.வி சேகர், சேரன், டி. ராஜேந்தர் உள்ளிட்டவங்க தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் துணை நடிகர்களை பற்றி தரகுறைவாகப் பேசி பேட்டி கொடுத்திருக்காங்க. தங்களுடைய சங்க உறுப்பினர்களைப் பற்றி தரக்குறைவா பேசியதற்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருக்காங்க. அவருடைய விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படியா இல்லைனா அவரை சங்கத்தில் இருந்து நீக்குவதற்கு விதிகள் இருக்கு.

இந்த நிலையிலதான் எஸ்.வி சேகர், நடிகர் சங்க அறங்காவலர் பதவியை ராஜினாமா செய்வதா அறிக்கை வெளியிட்டிருக்கார். மேலும் நடிகர் சங்கத்தின் நட்சத்திர விழாவுக்கு எதிராக அஜித் ஒரு கருத்தை சொன்னாகவும் பேட்டி கொடுத்திருக்கார். இதன் மூலம் அஜித் ரசிகர்களை சங்கத்திற்கு எதிராக திசைத் திருப்ப முயற்சிக்கிறார், ஆனா நாங்கள் அதை பற்றி கவலை படல, எங்க வேலைய சரிய செய்ய முயற்சி செய்துகொண்டு இருக்கிறோம்னு சொல்றாங்க.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close