[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 62ஆவது படத்தின் பூஜை நாளை நடைபெறுகிறது
 • BREAKING-NEWS நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல; மோடிக்கு எதிரானவன்: பிரகாஷ் ராஜ்
 • BREAKING-NEWS ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவுக்கு ஆதரவாக ரஜினி இருந்திருக்க வேண்டும் - சீமான்
 • BREAKING-NEWS வைரமுத்துவை காரணம் காட்டி தமிழகத்திற்குள் கொல்லைப்புறமாக வர நினைத்தால் வர முடியாது - பாரதிராஜா
 • BREAKING-NEWS ஹெச். ராஜாவும், தமிழிசையும் இணைந்து மெர்சல் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிவிட்டனர்- நடிகர் விஷால்
 • BREAKING-NEWS நடிகர் கமல், ரஜினி, விஷால் ஆகிய மூவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் - பிரகாஷ்ராஜ்
 • BREAKING-NEWS ஆண்டாள் சர்ச்சை தேவையற்றது- ஓ. பன்னீர் செல்வம்
 • BREAKING-NEWS ஒகி புயலால் காணாமல்போன மீனவர்களை தேடும்பணி நிறுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் நிர்மலா சீதாராமன்
 • BREAKING-NEWS வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி ஜன.31 இல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 • BREAKING-NEWS நாகலாந்து, மேகாலாயா மாநிலங்களில் பிப்-27 ஆம் தேதியும், திரிபுரா மாநிலத்தில் பிப்-18 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்- தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS ஜெ.சிகிச்சையின்போது உடன் இருந்த சசிகலாவுக்குத் தான் அனைத்து உண்மைகளும் தெரியும்- வைகோ
 • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 24வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கிறார்
 • BREAKING-NEWS கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி 2வது நாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் உண்ணாவிரத போராட்டம்
சினிமா 09 Jan, 2018 09:45 AM

’கர்ணன்’ கதை: பிருத்விராஜுக்கு பதில் விக்ரமை தேர்ந்தெடுத்தது ஏன்? இயக்குனர் விளக்கம்!

vikram-was-initially-sceptical-about-playing-karna-rs-vimal

பிருத்விராஜ் நடிக்க இருந்த படத்தில் விக்ரமை நடிக்க வைத்தது ஏன் என்று ’மகாவீர் கர்ணா’ பட இயக்குனர் விளக்கம் அளித்தார்.

பிருத்விராஜ், பார்வதி, டோவினோ தாமஸ் உட்பட பலர் நடித்து மலையாளத்தில் வெளியான படம், ‘என்னு நின்டே மொய்தீன்’.  இந்த படத்தை ஆர்.எஸ்.விமல் இயக்கி இருந்தார். 1960-களில் கோழிக்கோடு, முக்கம் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து மகாபாரத ’கர்ணன்’ கதையை இயக்க இருப்பதாகக் கூறியிருந்தார் ஆர்.எஸ்.விமல். கடந்த ஆண்டு, துபாயின் புர்ஜ் அல் அராப் ஓட்டலில் நடந்த விழாவில், ‘அடுத்து ’கர்ணன்’ கதையை படமாக்க இருக்கிறேன். இதில் பிருத்விராஜ், கர்ணனாக நடிக்கிறார். 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் உருவாகிறது’ என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் பிருத்விராஜுக்கு பதில் விக்ரம் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுபற்றி இயக்குனர் விமலிடம் கேட்டபோது, ’முதலில் பிருத்விராஜைதான் யோசித்தோம். அவரும் நடிக்க சம்மதித்திருந்தார். ஆனால் அவர், படம் இயக்கும் வேலையில் பிசியாக இருப்பதால், விக்ரமை தேர்ந்தெடுத்தோம். அவரிடம் போனில் இந்த விஷயத்தைச் சொன்னதும், ’’தமிழில் சிவாஜி நடிப்பில் ’கர்ணன்’ வெளியாகி இருக்கிறது. இதே கதை தெலுங்கில் என்டிஆர் நடிப்பில், ’தான வேர சூர கர்ணா’ என வெளியாகி இருக்கிறது. இதைத் தாண்டி என்ன சொல்லிவிட முடியும்?’’ என்று கேட்டார். பிறகு நேரில் சென்று திரைக்கதையை விளக்கினேன். கடந்த மூன்று வருடமாக இந்தக் கதையில் பணியாற்றி வருவதையும் சொன்னேன். பிறகுதான் எனது ஆய்வையும் கதையின் தன்மையையும் உணர்ந்து நடிக்க சம்மதித்தார். விக்ரம் தவிர மற்ற மொழி நடிகர்கள் பலர் இதில் நடிக்க இருக்கிறார்கள். பீமனாக ஹாலிவுட் நடிகர் நடிக்க இருக்கிறார். ’மகாவீர் கர்ணா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் அக்டோபர் மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. அடுத்த வருடம் டிசம்பரில் ரிலீஸ் ஆகும். கனடாவின் நயாகரா நீர்வீழ்ச்சி, ஜெய்ப்பூர் உட்பட பல இடங்களில் ஷூட்டிங் நடக்க இருக்கிறது.  இந்தியில் உருவாகும் இந்தப் படம் மற்ற மொழிகளில் டப் செய்து வெளியிடப்படும்’ என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close