[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

சிவகார்த்திகேயனுக்கு நான் போட்டியா?: சந்தானம் விளக்கம்

santhanam-s-sakka-podu-podu-raja-press-meet

நடிகர் சிவகார்த்திக்கேயனுக்கு நான் போட்டியில்லை என்று நடிகர் சந்தானம் கூறியுள்ளார்.

சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'சக்க போடு போடு ராஜா'. இந்தப் படம் வருகிற டிசம்பர் 22-ம் தேதி வெளியாகிறது. அதே சமயம் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படமும் வெளியாகிறது. சிவா ஹீரோ அவதாரம் எடுத்ததால்தான் காமெடி நடிகராக இருந்த சந்தானமும் கதாநாயகன் அந்தஸ்துக்கு முன்னேற முயற்சி எடுத்தார் என்று ஏற்கெனவே ஒரு சர்ச்சை சென்று கொண்டிருக்கிறது. இதனால் சிவகார்த்திகேயன், சந்தானத்திற்கு இடையே ஒரு மெளனப்போர் நடந்து வருகிறது.

இந்நிலையில் 'சக்க போடு போடு ராஜா’ பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சந்தானம், “சிவகார்த்திகேயனுக்கும் எனக்கும் போட்டியில்லை. அப்படியே இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத்தான் இருக்கும்” எனக் கூறினார். இந்தப் பேச்சின் மூலம் இருவருக்குள் ஒரு போட்டி நிலவுகிறது என்பது உண்மையாகியுள்ளது. ஆனால் அது ஆரோகியமான போட்டி. சிம்புவின் அறிமுகத்தால் சினிமாவிற்குள் நுழைந்தவர் சந்தானம். இப்போது இவர் படத்தில் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியிருக்கிறார். மேலும் இப்படத்தில் யுவன், அனிருத் ஆகிய இருவரும் பாடல்களைப் பாடியுள்ளனர். இதை பற்றி, “என்னை சினிமாவில் அறிமுகம் செய்த சிம்புவை, நான் இசையமைப்பாளராக அறிமுகம் செய்திருப்பது பெருமை” என்றார் சந்தானம். இந்தப் படத்திற்கு யு/ஏ சான்று கிடைத்துள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close