[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

சீக்ரெட்....அஜீத் பிறந்த நாளில் 'தல 57'... புது திட்டம்?

suspence-thala-57-plans-for-ajith-b-day

‘தல’ 57 வது படத்தில் வீரம், வேதாளம் உள்ளிட்ட மாபெரும் வெற்றிப் படங்களை கொடுத்த சிறுத்தை சிவாவுடன் அஜீத் மூன்றாவது முறையாக இணையவுள்ளார். இது தொடர்பான செய்திகள் உலா வந்த போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் அந்த படம் குறித்து ஆச்சர்யம் அளிக்கும் வகையில் வலைதளங்களில் செய்தி ஒன்று உலா வருகிறது.

பொதுவாக அஜீத்தின் படங்களின் பூஜை மற்றும், படப்பிடிப்பு தொடக்கம் மற்றும், ஆடியோ ரிலீஸ் உள்ளிட்ட விழாக்கள் வெகு சிம்பிளாக நடைபெறும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் தற்போது கசிந்துள்ள தகவலின் படி, சத்திய ஜோதி பிலிம்ஸின் தியாகராஜன், அஜீத்தின் 57வது படத்தின் பூஜையை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுளளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, அஜீத்தின் 57வது படத்தின் பூஜையை அஜீத்தின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி நடத்தப்படலாம் என்றும், அதற்காக பின்னி மில்லில் சிறப்பு செட் அமைக்கப்படலாம் என்றும் வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close