[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்
  • BREAKING-NEWS அரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்
  • BREAKING-NEWS கர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்
  • BREAKING-NEWS பாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS மாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்

பிரபாஸ் படத்தில் தமிழ் ஹீரோ

tamil-hero-in-prabhas-movie

பாகுபலி புகழ் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் நடிகர் அருண் விஜய்-யும் நடிக்க உள்ளார்.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் பாகுபலி. இந்த ஒற்றை படம் மூலம் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசம் கவர்ந்தவர் பிரபாஸ். இதனால் பாகுபலி வெற்றிக்கு பின் அவரின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அடுத்ததாக சாஹோ என்கிற படத்தில் பிரபாஸ் நடித்து வரும் நிலையில், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இந்த படம் உருவாகி வருகிறது.  சுஜீத் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ்-க்கு போலீஸ் அதிகாரி வேடம் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கிறார். இந்த தகவலை அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். சாஹோ படத்தில் தாம் இணைவது தமக்கு பெரு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பிரபாஸ்-க்கு போலீஸ் அதிகாரி கெட்டப் என கூறப்படுவதால் அதற்கு இணையான வில்லன் கெட்டப்பில் அருண் விஜய்யின் கதாபாத்திரம் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close