[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜானாவை நோக்கி நாம் செல்லவில்லை; மக்களின் முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வை மனவருத்தத்தோடு மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்- உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியுடனான 29 ஆண்டுகால கூட்டணியை முறித்துக் கொள்கிறது சிவசேனா
  • BREAKING-NEWS திடீரென APP மூலம் அரசியலில் நடிகர்கள் இறங்கியுள்ளனர்; அது அவர்களுக்கு ஆப்பாக தான் முடியும்- ஜெயக்குமார்
சினிமா 04 Aug, 2017 12:58 PM

வரிசை கட்டும் மெகா பட்ஜெட் படங்கள்!

kollywood-biggies-get-ready

கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது, ’பாகுபலி-2’ . இந்த வருடத்தின் முதல் பாதியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான இந்த படத்துக்குப் பிறகு பெரிய பட்ஜெட் படங்கள் வரவில்லை. வருடத்தின் இரண்டாம் பாதியான இப்போது ரிலீஸுக்கு வரிசைக் கட்டி நிற்கின்றன, அரை டஜன் மெகா பட்ஜெட் படங்கள்.

வரும் 11-ம் தேதி வெளியாகிறது, ’வேலையில்லா பட்டதாரி 2’. தனுஷ், கஜோல், அமலாபால், விவேக் உள்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸும் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸும் இணைந்து தயாரித்துள்ளது. அதே நாளில் வெளியாகிறது, உதயநிதி ஸ்டாலினின் ’பொதுவாக எம்மனசு தங்கம்’. தளபதி பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு இமான் இசை அமைத்துள்ளார். தேனாண்டாள் ஸ்டூடியோ லிமிடெட் தயாரித்துள்ளது.

அடுத்து அதிக எதிர்பார்ப்புக்குள்ளான படமாக, அஜீத்தின் ’விவேகம்’ இருக்கிறது. வரும் 24-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தில் அஜீத்துடன் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்துள்ளனர். சிவா இயக்கியுள்ளார். அஜீத்தின் முந்தைய படத்தை விட, ’விவேகம்’ பிசினஸ் அனைத்து ஏரியாவிலும் அமோகம் என்கிறது கோடம்பாக்கம்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ’மெர்சல்’ படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. ஸ்ரீதேனாண்டாள் பிலிஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் சமந்தா, நித்யா மேனன், காஜல், வடிவேலு உட்பட பலர் நடித்துள்ளனர். விஜய் நடித்த படங்களிலேயே அதிக செலவில் எடுக்கப்பட்ட படம் இது என்கிறார்கள். வரும் 20-ம் தேதி இதன் பாடல் வெளியீடு நடக்க இருக்கிறது.

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கும் ’வேலைக்காரன்’ படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டது.  மெகா பட்ஜெட் ஆக்‌ஷன் படமான இதில் பஹத் பாசில், சினேகா, பிரகாஷ் ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். செப்டம்பரில் ரிலீஸ் ஆக இருக்கும் இந்தப் படத்தை, 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் டி.ராஜா தயாரித்திருக்கிறார். 

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவநட்சத்திரம், விஜய்சந்தர் இயக்கத்தில் நடித்திருக்கும் ஸ்கெட், வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களின் ஷூட்டிங் இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதன் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்படவில்லை என்றாலும் இந்த வருட ரிலீஸ் லிஸ்டில்தான் இந்தப் படங்களும் இருக்கின்றன.

ஜிஎஸ்டி வரி, பெப்சி பிரச்னையில் தள்ளாடிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவை சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கிறது சமீபத்தில் வெளியாகி ஹிட்டான, ’விக்ரம்-வேதா’, ’மீசைய முறுக்கு’ படங்கள். நல்ல கதையை கொண்ட படங்கள் என்றால் ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பார்கள் என்பதை இந்தப் படங்கள் நிரூபித்துள்ளதால் தயாரிப்பாளர்கள் அடுத்த ரிலீஸில் ஆர்வமாக இருக்கிறார்கள். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close