[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

அட, ஒடிசா புலிகுட்டிக்கு பாகுபலி பெயர்!

newborn-tiger-bahubali

ராஜமவுலி இயக்கியுள்ள ’பாகுபலி 2’ படம் இந்தியா முழுவதும் பரபரப்பாக ஓடி வருகிறது. வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. ’ஊரெங்கும் பாகுபலி பேச்சுதான்’ என்ற நிலையில் இப்போது புலிக்குட்டி ஒன்றுக்கு பாகுபலியின் பெயரை வைத்திருக்கிறார்கள்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகே உள்ளது நந்தன் கண்ணன் வனவிலங்கு பூங்கா. இங்குள்ள மேகா, விஜயா, சினேகா ஆகிய புலிகள், ஏழு குட்டிகளை சமீபத்தில் ஈன்றன. இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் பார்வையாளர்களிடம் கேட்டிருந்தனர். இதற்காக வனவிலங்கு பூங்காவில் பெட்டி வைத்து அதில் தாங்கள் விரும்பிய பெயர்களை எழுதி போடலாம் என கூறியிருந்தனர். நேற்று இதை திறந்து பார்த்தனர். ஏராளமானோர் பாகுபலி என்ற பெயரை சிபாரிசு செய்திருந்தனர். இதில் ஒரு புலிக்குட்டிக்கு அந்தப் பெயரை சூட்டினர். மற்றப் புலி குட்டிகளுக்கு குந்தன், அடியஷா, சாஹில், விக்கி, சினு, மவுசுமி ஆகிய பெயர்கள் சூட்டப்பட்டன.

இதற்கான விழாவில் ஒடிசா மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பிஜய்ஸ்ரீ ரவுத்ரி கலந்துகொண்டார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close