[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

ஏறி மிதித்து போய்க்கொண்டே இருப்போம்: நடிகர் விஷால்

actor-vishal-speech

’எங்களை யாராலும் தடுக்க முடியாது; ஏறி மிதித்து போய்க்கொண்டே இருப்போம்’என நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் கூறினார்.

நடிகர் சங்க கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, சங்க வளாகத்தில் இன்று காலை நடந்தது. இதில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால் உள்ளிட்ட பல மூத்த நடிகர், நடிகைகள் பங்கேற்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், உங்கள் காலைத் தொட்டு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் வைத்த நம்பிக்கை வீண் போகாது. செப்டம்பர் 2018-ஆம் ஆண்டு நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படும் என்றார். படப்பிடிப்புக்காக, கார்த்தி வெளியூரில் இருப்பதால் அவரால் கலந்து கொள்ள இயலவில்லை. எத்தனையோ தடைகளைத் தாண்டி வந்துள்ளோம். எங்களை யாராலும் தடுக்க முடியாது. ஏறி மிதித்து போய்க் கொண்டே இருப்போம் என்றார். கார்த்தியும் நானும் இணைந்து நடிகர் சங்க கட்டடத்துக்கு ரூ.10 கோடி கொடுக்கிறோம் என்றும் விஷால் கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close