[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

பொங்கலுக்கு 7லில் 4 திரைக்கு வருகிறது

pongal-release-movie-list

இந்த ஆண்டு பொங்கலுக்கு 7 தமிழ் படங்கள் ரிலீஸாகும் என எதிர்பாக்கப்பட்ட நிலையில் தற்போது உறுதியாகிருப்பவை 4 படங்கள் தான். பைரவா, புரியாத புதிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, ப்ரூஸ் லீ ஆகிய 4 படங்களுக்கான ப்ரமோஷனல் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பைரவா

சாதாரணமான நாட்களில் விஜய் படங்கள் வெளியாவதே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் என்றால் இந்த ஆண்டு பொங்கலுக்கு விஜய் படம் வெளியாவது மிகப்பெரிய கொண்டாட்டம் எனலாம். இந்தாண்டின் முதல் விஜய் படம் பைரவா தான். வருடத்திற்கு இரண்டு படங்களை கொடுத்து வந்த விஜய் கடந்த ஆண்டு ஒரே ஒரு படத்தை மட்டுமே கொடுத்திருந்தார். இந்த ஆண்டு முதல் மாதத்திலேயே பைரவா வெளியாவதால் இதே ஆண்டில் விஜய்யின் அடுத்த படத்தையும் எதிர்பார்க்கலாம்.

பைரவா படத்தை முடித்த கையோடு ஓய்வில் இருக்கும் விஜய் அடுத்ததாக தெறி இயக்குனர் அட்லியுடன் மீண்டும் இணைவது உறுதியாகியுள்ளது. புத்தாண்டுக்கு பைரவா ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று ட்ரெண்டில் இருந்து வருகிறது. பொங்கலை முன்னிட்டு வருகிற 12 ஆம் தேதி பைரவா ரிலீஸ் ஆகவுள்ளது. ட்ரெய்லரில்’ நா வரேன் தனியா’ என விஜய் சொல்வதைப் போல பொங்கல் ரிலீஸ் பட்டியலில் வரலாம் வா வரலாம் வா என்று வந்து கொண்டிருக்கிறது.

புரியாத புதிர்

விஜய் படத்துடன் முதன் முதலாக போட்டி போடவிருக்கிறார் விஜய்சேதுபதி. விஜய் சேதுபதியின் புரியாத புதிர் வருகிற 13 ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் புரியாத புதிர் படத்தின் சிங்கிள் வீடியோ பாடல் வெளியிடப்பட்டது. மழைக்குள்ளே நனையும் என தொடங்கும் இந்த பாடலை ஸ்ரேயா கோஷல் ஹரிசரண் பாடியிருந்தனர். இந்த பாடல் காட்சிகள் நெட்டீசன்களால் அதிகம் பேசப்பட்டது.

இயக்குனர் ராமின் உதவி இயக்குனர் ரஞ்ஜித் ஜெயக்கொடி இப்படத்தை இயக்கியுள்ளார். வெளியான பாடல் காட்சிகள், ட்ரெய்லர் என அனைத்திலும் புரியாத புதிரில் விஜய்சேதுபதி கூடுதல் அழகு.!
பொங்கல் ரீலிசை முன்னிட்டு படக்குழுவினர் ப்ரொமோஷனல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கோடிட்ட இடங்களை நிரப்புக

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் கோடிட்ட இடங்களை நிரப்புக எனும் படத்தை இயக்கியுள்ளார். சாந்தனு பாக்கியராஜ், பார்வதி நாயர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சத்யா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்தும் இருக்கிறார். டி.ராஜேந்தர் இப்படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார். இவர் பாடியுள்ள டமுக்காட்லான் டமுக்காட்லான் என்கிற இந்த பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

புருஸ்லீ

இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கும் புருஸ்லீ படத்தில் ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கிருத்தி கர்பண்டா களமிறங்கியுள்ளார். மேலும் மொட்டை ராஜேந்திரன், பாலசரவணன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். டிசம்பர் மாதமே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புருஸ்லீ பொங்கல் பட ரேஸில் இணைந்திருக்கிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close