[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினி, கமல் வாழ்த்து!

kamal-hassan-and-rajinikanth-welcomes-modi-plan

ஊழலையும், கருப்புப் பணத்தையும் ஒழிப்பதற்காக, நேற்று நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாக்காசாக மாறியுள்ளன. அதற்கு பதிலாக, புதிய 500 ரூபாய், 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த அறிவிப்பை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்புக்கு தலைவணங்குவதாகவும், இதன் மூலம் புதிய இந்தியா பிறந்துள்ளதாகவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதே போலவே, நடிகர் கமல்ஹாசனும் வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ‘பிரதமர் மோடியின் அறிவிப்பிற்கு தலை வணங்குகிறேன். 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை அனைத்து அரசியல் கட்சிகளும் கொண்டாட வேண்டும்’. மிக முக்கியமாக ஏற்கனவே முறையாக வரிசெலுத்துபவர்களும் இதனை கொண்டாட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close