Published : 24,Jul 2017 02:07 PM

சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள்: முதல்வர் மவுனமாக இருப்பது ஏன்? - ஸ்டாலின்

Concessions-to-Sasikala-in-jail--Why-is-the-Chief-Minister-silent-

சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்க லஞ்சம் கொடுக்கப்பட்ட புகார் தொடர்பாக முதலமைச்சர் பதிலளிக்க திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், பெங்களூரு சிறையில் சசிகலா தரப்பில் லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில், முதலமைச்சர் வாய் திறக்காமல் மவுனமாக இருப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொரு பதிவில் பிரதமர் மோடி டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்திக்காமல், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர்களை சந்திப்பது வேதனை அளிப்பதாகக் கூறியுள்ளார்.

மேலும், தமிழகத்தின் 45 கிராமங்களில் பெட்ரோகெமிக்கல் திட்டத்திற்கு அனுமதி என்பது அதிமுக அரசு, பாஜக 'எள்' என்றால் ‘எண்ணெய்’ ஆக இருப்பதையே காட்டுகிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்