[X] Close

மாஸ் காட்டிய புஷ்பா டீசர்; ஒரே நாளில் 2.5 கோடி வியூஸ்: ரசிகர்களுக்கு அல்லு அர்ஜூன் நன்றி

சினிமா

Tamil--Malayalam--Kannada-----Heartfelt-thanks-to-the-fans---Allu-Arjun-

புஷ்பா’ படத்தின் டீசர் வெளியான ஒரே நாளில் இரண்டு கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ள நிலையில், தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்திருக்கிறார் நடிகர் அல்லு அர்ஜுன்.


Advertisement

’அலா வைகுந்தபுரம் லோ’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன், பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’ படத்தில் நடித்து வருகிறார். செம்மரக்கட்டை கடத்தல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் பிறந்த நாளன்று வெளியானது. அப்போதே இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் கூடின. கடத்தல்கார லாரி டிரைவராக நடிக்கும் அல்லு அர்ஜுனுக்கு ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். வில்லனாக மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் நடிக்கிறார்.

இந்நிலையில், இன்று அல்லு அர்ஜுனின் தனது 38-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக ‘புஷ்பா’ படக்குழு ஹீரோ அறிமுக வீடியோவை நேற்றிரவு வெளியிட்டுள்ளது. அடர்ந்த காட்டுக்குள் செம்மரக்கட்டைக் கடத்தும் புஷ்பராஜாக வரும் அல்லு அர்ஜுனின் அறிமுகமும் சண்டைக்காட்சிகளும் மிக பிரம்மாண்டமாக காட்சியமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.


Advertisement

image

ஹீரோ அறிமுக வீடியோ வெளியான ஒரே நாளிலேயே அதாவது 22 மணி நேரத்திற்கு முன்பே 2 கோடி பார்வையாளர்களுக்குமேல் கடந்துள்ளது. இதனால் நடிகர் அல்லு அர்ஜுன் நெகிழ்ச்சியில் “ மற்ற மொழிகளை சேர்ந்த ரசிகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தமிழ் மொழியைச் சேர்ந்த ரசிகர்களும், மலையாள ரசிகர்களுக்கும், கர்நாடக ரசிகர்களுக்கும், வட இந்திய மாநிலங்களை சேர்ந்த ரசிகர்களுக்கும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள ரசிகர்களுக்கும் எனது நன்றிகள். நீங்கள் தான் என்னை பெருமைப்பட வைத்து உள்ளீர்கள்.

இன்று எங்களுக்கு மிகப்பெரிய சந்தை உருவாகியுள்ளது. அது வெறும் தெலுங்கு மொழி சந்தையை வைத்து மட்டும் அல்ல. இது உங்கள் அனைவராலும்தான் சாத்தியமானது. நீங்கள் தான் என்னை மிகப்பெரிய இடத்தில் கொண்டு வந்து வைத்துள்ளீர்கள்”என்று நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.


Advertisement


Advertisement

Advertisement
[X] Close