[X] Close

சாக்குமூட்டையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் எதிரொலி - திருச்சி ஆட்சியர், எஸ்.பி மாற்றம்

சுடச்சுட

Election-commission-transferred-Trichy-collector-and-SP

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, எஸ்.பி.ராஜன், சார் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்திலிருந்து வெளியான செய்திகுறிப்பில், திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரியாக உள்ள சிவராசு தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும், ராஜன் எஸ்பியும், ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

திருச்சியில் முசிறி அருகே ஒரு கோடி ரூபாய் சாக்குமூட்டையில் கைப்பற்றப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் அதிகாரிகளை இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. திருச்சி ஆட்சியராக திவ்ய தர்ஷிணி, எஸ்.பியாக மயில்வாகனன், சார் ஆட்சியராக விசு மகாஜனை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

முன்னதாக கோவை ஆட்சியர் மற்றும் எஸ்.பி ஆகியோரை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement
[X] Close