போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு குறித்து தெலுங்கு நடிகர், நடிகைகள் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் நேரில் ஆஜராகில் விளக்கமளித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் தருண்குமார் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
போதை பொருள் கடத்தல் தொடர்பாக, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கெல்வின் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் பலர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. போதைக்கும்பலுடன் தொடர்பு குறித்து பதிலளிக்க திரைத்துறையினருக்கு சிறப்பு விசாரணை குழு சம்மன் அனுப்பியிருந்தது. சம்மன் அனுப்பப்பட்டதை தொடர்ந்து விசாரணைக்கு நடிகர் நடிகைகள் ஆஜராகி வருகின்றனர். பாகுபலி 2 படத்தில் அனுஷ்காவின் உறவினராக நடித்திருந்த சுப்பா ராஜிடம் நேற்று விசாரணை நடைபெற்ற நிலையில், ஒருநாள் முழுவதும் அவரை போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இன்று நடிகர் தருண் குமார் ஆஜராகி விளக்கம் அளிக்கவுள்ளார். மேலும் போதை பொருள் விற்பனை கும்பலுடன் தொடர்பு உள்ளதாக சந்தேகத்தின் பேரில் 17 பார்கள் மற்றும் கிளப்புகளும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Loading More post
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
புகாரை ஏற்க மறுத்த போலீஸ்: சிசுவின் சடலத்துடன் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட தந்தை
கும்பகோணம்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பரிதாபம் எப்படி வேலை செய்யுது பாத்தியா பையா.. இளைஞனின் சுவாரஸ்யமான ஏர்போர்ட் ட்ரிக்!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!