Published : 23,Mar 2021 03:07 PM
உணர்ச்சியில் கண்கலங்கிய குருணால் பாண்ட்யா... தேற்றிய ஹர்திக் பாண்ட்யா!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக விளையாட அறிமுக வீரராக களம் இறங்கிய குருணால் பாண்ட்யா அதை எண்ணி உணர்ச்சிவசப்பட்டு கண் காலங்கியுள்ளார். அதை கவனித்த அவரது சகோதரரும், சக வீரருமான ஹர்திக் பாண்ட்யா ஆறுதல் சொல்லி தேற்றியுள்ளார்.
உள்ளூர் கிரிக்கெட்டில் பரோடா அணிக்காக சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய ஒருநாள் அணியில் குருணால் விளையாட தேர்வாகியிருந்தார். இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் விளையாடி இருந்தாலும் ஒருநாள் போட்டியில் அவர் அறிமுகமாவது இப்போது தான். அவரது ஒருநாள் போட்டிக்கான தொப்பியை அவரது சகோதரர் ஹர்திக் கொடுத்துள்ளார். உடனடியாக உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கியுள்ளார் குருணால்.
அதோடு அதை வாண் நோக்கி உயர காமித்து அண்மையில் மறைந்த தனது தந்தைக்கும் அஞ்சலி செலுத்தினார். அவருக்கு சக வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவருடன் மற்றொரு வீரர் பிரசீத் கிருஷ்ணாவும் அறிமுக வீரராக களம் கண்டுள்ளார்.
ODI debut for @krunalpandya24 ?
— BCCI (@BCCI) March 23, 2021
International debut for @prasidh43 ?#TeamIndia@Paytm#INDvENGpic.twitter.com/Hm9abtwW0g
இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களை இந்தியா கைப்பற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.