Published : 20,Mar 2021 06:37 PM

தமிழகத்தில் 2வது நாளாக 1000ஐ கடந்த கொரோனா தொற்று!

Tamil-Nadu-corona-positive-cases-rate-crossed-1000-in-2nd-day-also

தமிழகத்தில் 2வது நாளாக ஒருநாள் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்து பதிவாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவிவருகிறது. இன்று தமிழகத்தில் மேலும் 1243 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னை, கோவை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் 75,165 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தமிழகத்தில் 1240 பேர் மற்றும் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 3 பேர் என 1243 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

image

கொரோனா காரணமாக மேலும் 8 பேர் இறந்தநிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,590ஆகவும், சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 7,291 ஆகவும் அதிகரித்துள்ளது. இதனால் இரண்டாம் அலை கொரோனா பரவலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஜனவரி மாத தொடக்கத்திலிருந்து கிட்டத்தட்ட 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், மார்ச் 10ஆம் தேதிக்குப்பிறகு பரிசோதனை எண்ணிக்கையும் 70 ஆயிரத்துக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளதும் இந்த பாதிப்பு எண்ணிக்கை உயர்வுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்