Published : 21,Jul 2017 02:31 PM

அஜீத் போன்.. அதிர்ச்சியில் கண்கலங்கிய அனிருத்!

Ajith-Phone-Call--Anirudh-eyeed-in-shock

விவேகம் படத்தின் காதலாடா மூன்றாவது சிங்கிள் ட்ராக் நேற்று வெளியானது.

இந்நிலையில் காதலாடா முழுப்பாடல் வரிகளும் இன்று யு-டியூப்பில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. முன்பு வந்த சர்வைவா, தலை விடுதலை பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில் மூன்றாவதாக இப்பாடல் வெளியாகி இருக்கிறது. அஜீத்துக்காக கபிலன் வைரமுத்து எழுதிய இந்தப்பாடலை அனிருத் ரவிச்சந்திரனுடன் ப்ரதீப் குமார், ஷாசா திரிபாதி ஆகியோர் பாடியுள்ளனர்.

’உன்னோடு வாழ்வது ஆனந்தமே..ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே எனத் தொடங்கும் பாடலுக்கு கர்நாடக சங்கீதத்தில் இசையமைத்திருக்கிறார் அனிருத். இந்த வீடியோவில் அஜீத்துடன் காஜல் அகர்வால் இடம் பெற்றுள்ள சில நிமிட காட்சிகளும் வந்து போகின்றன. 

இந்நிலையில், விவேகம் படத்தில் பணியாற்றியது குறித்து அனிருத் கூறுகையில், சர்வைவா, தலை விடுதலை பாடல்களை கேட்டுவிட்டு அஜித் எனக்கு போன் கால் செய்து ’உங்களுடன் பணியாற்றுவது பெருமையாக இருக்கிறது’ எனச் சொன்னார். இதனால் கண்கலங்கி விட்டேன்.  நான் ஒரு அஜித் ரசிகன். அவர் பாராட்டியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது’ எனத் தெரிவித்துள்ளார்.  

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்