[X] Close

“ரூ.10 கோடிக்கு என்னை விலை பேசினார்கள்”: மநீம வேட்பாளர் சினேகன்

சுடச்சுட

10-crore-rupees-Bargain-with-me-says-snehan

தேர்தலில் போட்டியிடாமலிருக்க தனக்கு 10 கோடி ரூபாய்க்கு விலை பேசினார்கள் என மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சினேகன் தெரிவித்தார்.

ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில் இன்றுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெறுகிறது. இதனால் பல்வேறு கட்சி வேட்பாளர்களும் சுயேச்சை வேட்பாளர்களும் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சினேகன் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை சினேகன் இன்று தாக்கல் செய்தார். தொடர்ந்து பேசிய அவர், “தேர்தலில் போட்டியிடாமலிருக்க என்னை 10 கோடி ரூபாய்க்கு விலை பேசினார்கள்” எனத் தெரிவித்தார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close