[X] Close

”விசிக வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தை ஒதுக்குங்கள்” - நாகை மீனவர்கள் போர்க்கொடி

பொதுக்களம்

Nagai-Fishermen-battle-flag-to-c-Udayasuriyan-symbol-to-VCK-candidate

நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தை வழங்க வேண்டும் என மீனவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.


Advertisement

image

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் நாகை தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தனி சின்னத்தில் போட்டியிட போவதாக அறிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளருக்கு, உதயசூரியன் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என நாகை மீனவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.


Advertisement

நாகை மாவட்டம் சம்பா தோட்டம் மீனவ கிராமத்தில் மீனவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய உதயசூரியன் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

image

மேலும், திமுக தலைமை மீனவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், மக்கள் மனதில் இடம்பெற்று இருக்கும் உதயசூரியன் சின்னத்தை நாகை தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளருக்கு ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close