ராகுல் காந்தி
ராகுல் காந்திமுகநூல்

"R.S.S அமைப்பின் தந்திரங்களுக்கு முடிவு கட்டும் தேர்தல் இது" - ராகுல்காந்தி

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை குறிப்பிட்டு பிரதமர் மோடி குற்றஞ்சாட்டி வரும் நிலையில், தங்களது தேர்தல் அறிக்கை மக்களின் குரலாக ஒலிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

எக்ஸ் வலைதளத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட வீடியோவில், “ஜனநாயகத்தை பாதுகாத்து பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தந்திரங்களுக்கு முடிவுகட்டும் தேர்தலாக இந்த மக்களவைத் தேர்தல் இருக்கும்.

I.N.D.I.A கூட்டணி ஜனநாயகத்தை காக்க போராடுகிறது. நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தயாரித்து இருக்கிறது.

ராகுல் காந்தி
தலைப்புச் செய்திகள் | 2ம் கட்ட வாக்குப்பதிவு முதல் திரவ நைட்ரஜனை உணவுப்பொருள் விற்பனை எச்சரிக்கை வரை

காங்கிரஸின் தேர்தல் அறிக்கை மக்களின் குரலாக இருக்கிறது. மோடி 10 முதல் 15 பேரை மட்டுமே கோடீஸ்வரராக மாற்றி இருக்கிறார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கோடிக்கணக்கான பெண்கள் மற்றும் இளைஞர்களை லட்சாதிபதிகளாக மாற்றுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com