நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மது போதையில் இருந்த நபர் காவல் உதவி ஆய்வாளருடன் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராசிபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளராக இருப்பவர் மாணிக்கம். இவர், ஒரு வழக்கு தொடர்பாக அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது, சாரதிராம் என்பவர் மது போதையில் அங்கு நடமாடியுள்ளார்.
அவரை மருத்துவமனையிலிருந்து வெளியேறுமாறு உதவி ஆய்வாளர் மாணிக்கம் கூறியுள்ளார். இதில் ஆத்திரமுற்ற சாரதிராம், காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கத்துடன் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, மது போதையில் இருந்த சாரதிராம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கம், சாரதிராம் உறவினர்களிடம் கூறுகையில், “என் கையை இறுக்கி பிடித்துக்கொண்டு விடவில்லை. என்னை போதையில் இருக்காயா? எவ்வளவு போதையில் இருக்கிறாய் என்று கேட்கிறார். மருத்துவர் வந்து பரிசோதனை செய்யட்டும். யார் போதையில் இருக்கிறார்கள் என்று அப்போது தெரியும். நான் அவருக்கு அறிவுரைதான் கூறுகிறேன்” என்றார்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!