[X] Close

கல்குவாரிக்கு எதிராக மக்கள் காத்திருப்பு போராட்டம்

Standing-Strike-against-Gulwavari

மதுரை மாவட்டம் அறுபத்தாறு உசிலம்பட்டியிலுள்ள பெருமாள் மலையில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 


Advertisement

கடந்த 3 மாதங்களுக்கு முன் பெருமாள் மலையில் 5 ஏக்கர் பரப்பளவில் 21 கோடியே 50 லட்சம் மதிப்பில் கல்குவாரி அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டது. கல்குவாரி அமைக்கப்பட்டால், விளைநிலங்கள் பாதிக்கும் எனக் கூறி கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். மாவட்ட ஆட்சியருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பெருமாள் மலையில் கல்குவாரி அமைக்கப்படாது என உறுதியளிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்த நிலையில், தற்போது கல்குவாரி அமைக்க 2 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் விடப்பட்டு, முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்து தெரியவந்தது. குவாரிக்கான அளவைப் பணிகள் முடிந்து எல்லைக் கற்கள் நடப்பட்டதால், கிராம மக்கள் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close