Published : 26,Feb 2021 02:13 PM
புற்றுநோய் சிகிச்சைக்கு சல்மான் கான் உதவி: நடிகையின் தாய் நெகிழ்ச்சி

தனது புற்றுநோய் சிகிச்சைக்கு உதவிக்கரம் நீட்டிய சல்மான் கான் மற்றும் அவரது சகோதரர் சோஹைல் கானுக்கு நடிகை ராக்கி சாவந்தின் தாய் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவரது தாயார் ஜெயா, தனது சிகிச்சைக்கு உதவிய பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது சகோதரர் சோஹைல் கானுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கிறார்.
அந்த வீடியோவில் அவர் கூறுகையில், ‘’சல்மான், சோஹைல் உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி. எனது கீமோதெரபி நடந்து கொண்டிருப்பதை நீங்கள் காண முடியும். நான் இப்போது மருத்துவமனையில் இருக்கிறேன். இன்னும் இரண்டுகட்ட பரிசோதனைகள் உள்ளன. அதன் பிறகு எனக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும். கடவுள் எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். உங்கள் இலக்குகள், ஆசைகள் அனைத்தும் நிறைவேறட்டும்’’ என்றார்.