Published : 19,Feb 2021 02:43 PM

கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட ரசிகர் – அட்வைஸ் செய்த நடிகர் யஷ்!

KGF-actor-Yash-s-fan-dies-by-suicide-in-Bengaluru--leaves-a-last-wish-for-actor-and-former-CM-Siddaramaiah

தனது இறுதிச்சடங்கில் ’கேஜிஎஃப்’ புகழ் நடிகர் யஷ் கலந்துகொள்ள வேண்டும் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, சொந்த பிரச்னைகளுக்காக தற்கொலை செய்துகொண்ட ரசிகரின் துயரச் சம்பவத்தையொட்டி யஷ் ரசிகர்களுக்கு அக்கறையுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கன்னடத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ’கேஜிஎஃப்’ பிரம்மாண்டமான வசூல் சாதனை செய்தது. அதனைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி அதிலும் வெற்றியை குவித்தது. தற்போது, ’கேஜிஎஃப் 2’ வரும் ஜூலை 16 ஆம் தேதி வெளியாகிறது. டீசர் வெளியானபோது ஒரே நாளில் மில்லியன் லைக்ஸ், பல கோடி வியூஸ்களை தாண்டிய இந்தியாவின் முதல் படம் என்ற பெருமையையும் பெற்றது. இப்படத்தில், டானுக்கெல்லாம் பெரும் டானாக தனது நடிப்பில் கவனம் ஈர்த்தார் யஷ். இதனால், ஷுக்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் நிரம்பிக்கிடக்கிறார்கள்.

image

அந்த தீவிர ரசிகர்களில் ஒருவரான கர்நாடகாவைச் சேர்ந்த ராமகிருஷ்ணா என்ற இளைஞர் தனது தனிப்பட்ட பிரச்னைகளுக்காக மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். ஆனால், தற்கொலை செய்வதற்குமுன் தனது இறுதிச்சடங்கில் ’நடிகர் யஷும், கர்நாடக எதிர்கட்சித் தலைவர் சித்தராமையாவும் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வேண்டும். அதுதான், எனது கடைசி ஆசை’ என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார். அவர், விருப்பப்படியே கர்நாடகா எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா இளைஞர் ராமகிருஷ்ணாவின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டார். யஷும் கலந்துகொள்வாரா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது.

image

ரசிகரின் இறுதிச்சடங்கில் அப்படி கலந்துகொண்டால், அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்பதால் நடிகர் யஷ் ரசிகர்களுக்கு அன்போடும் அக்கறையோடும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் “நாங்கள் நடிகர்கள். உங்கள் கைத்தட்டலையும் விசிலையும் கேட்கவும் நீங்கள் எங்கள் மீது பொழியும் அன்புக்காகவும் வாழ்கிறோம். ரசிகர்களிடமிருந்து இதனை எதிர்பார்க்கவில்லை” என்று அக்கறையுடன் அட்வைஸ் செய்திருக்கிறார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்